அம்மோனியா கசிவு கோர சம்பவம்.. “தொழிலாளர் பாதுகாப்பில் சமரசம் கூடாது”- உதயநிதி, எடப்பாடி வலியுறுத்தல்

  • சென்னை: இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர். தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்த அரசு உறுதி செய்திட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Advertisement

    திருவள்ளூர் அருகே, இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயுக் கசிவு விபத்து, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை பலனின்றி பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Advertisement

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

    இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும். தொழிலாளர் நலனிலும் - பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தனியார் இறால் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களைக் காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்த அரசு தொடர் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Opposition Leader Udhayanidhi Stalin and AIADMK General Secretary Edappadi Palaniswami have expressed their anguish over the deaths of workers caused by an ammonia gas leak at a shrimp export factory. They have urged the government to ensure that safety protocols in factories are strictly adhered to.