திருவள்ளூர் முதல் குமரி வரை.. இரவு 7 மணி வரை மழை விடாது.. தமிழகம் முழுக்க 20 மாவட்டங்களுக்கு அலர்ட்

  • சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், குமரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தென்காசி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலோடு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் காலையில் இருந்தே மழை பெய்து வந்த நிலையில் இன்றும் விட்டு விட்டு லேசான மழை பெய்தது. தூத்துக்குடி, கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு பகுதியிலும் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது. இதேபோன்று நெல்லையில் முக்கூடல், சேரன்மாதேவி, அம்பை, பாபநாசத்திலும் தென்காசியில் கடையம், பாப்பான்குளம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூரிலும் லேசான மழை முதல் கனமழை வரை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    Advertisement

    20 மாவட்டங்களில் மழை

    இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகம் முழுக்க 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில், இன்று இரவு 7 மணி வரை கடலூர், குமரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருவள்ளூர் திருப்பூர், விருதுநகர், திருச்சி, நெல்லை மற்றும் விழுப்புரம் ஆகிய 20 மாவட்டங்களில் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement
    Depression: வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 3 நாட்கள் கனமழை பிச்சு உதறும்.. டெல்டா வெதர்மேன்

    கனமழை வெளுக்கும்

    முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    நீலகிரி, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    நாளை கனமழை பெய்யும் இடங்கள்

    நாளை செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    Advertisement
    தீபாவளி முடிந்தாலும்.. விடாத மழை! டெல்டாவில் இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு!

    மேலும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் கிளைமேட் எப்படி?

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று 9 ஆம் தேதி மற்றும் நாளை10 ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    The Chennai Meteorological Centre has stated that there is a possibility of rain in 20 districts across Tamil Nadu until 7:00 PM today. The Meteorological Centre has indicated that districts including Cuddalore, Kanyakumari, Mayiladuthurai, Pudukkottai, Nagapattinam, Ramanathapuram, Sivaganga, Thanjavur, Theni, Tenkasi, Thiruvallur, and Tiruppur may experience rain accompanied by thunder and lightning.