திமுக ஆட்சி வீழ்ச்சிக்கு இதுவே காரணம்.. முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை நேரடியாக வார்னிங்

  • சென்னை: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு, திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது என்று வி தி லீடர் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    Advertisement

    அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் மேலும் கூறுகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.

    Advertisement

    சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.

    நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

    Advertisement

    இது பற்றி கருத்து தெரிவித்துள்ள தவெக ஆதரவாளர், "அண்ணா நீங்க சொல்றது 100 சதவீதம் உண்மைதான்,, ஆனால் இப்படி கட்சியில் இருந்து எவனாவது பேசுனா கட்சி ரீதியா நடவடிக்கை எடுக்கலாம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்...... ஆனால் கட்சியிலே இல்லாமல் ஒரு ஃபேக் ஐடி ஓபன் பண்ணி ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இப்படி பேசுவதால் அது எப்படி கண்ட்ரோல் செய்ய முடியும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    இன்னொரு தவெக ஆதரவாளர் கூறுகையில், "பேக் ID'S மற்றவர்களைப் பற்றி பல தீயவை பேசுகின்றனர். முதல்வர் விஜய் இதற்கு முன்பும் இதே போன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டார், சமூக ஊடகங்களில் சுற்றித் திரியும் பேக் IDs மீது யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் இப்போது அவர் முதலமைச்சர் இப்போது தவறாகப் பேசினால், அது ஒரு பிரச்சனை" இவ்வாறு கூறியுள்ளார்.

    Advertisement

    மூன்றாவது தவெக ஆதரவாளர் கூறுகையில், அண்ணாமலை அவர்களே "சமூக வலைதளங்களில் யாரேனும் ஏதேனும் பதிவை போட்டால் அவர் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளராக இருந்தால் உடனே தமிழக வெற்றிக் கழகம் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்று அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்.....

    தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கும் ஏதேனும் நிர்வாகிகள் தவறு செய்தால், அவதூறாக பேசினால், தரம் தாழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டியதை தமிழக வெற்றிக் கழகம் நல்ல முறையில் நடவடிக்கை எடுக்கும்.. இது புரியாமல் ஒட்டுமொத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்துவது முட்டாள்தனம் அது மட்டுமல்ல சந்தர்ப்பவாதம்...புரிகிறதா.. அண்ணாமலை அவர்களே!!" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    Annamalai, founder of the 'we the Leaders' organization, has warned Chief Minister Vijay that the DMK's downfall was caused by their dismissal of public criticism and dissenting views—driven by the arrogance of power—and has expressed concern that his government might be treading the same path.