Thooimai Mission: மக்க நீ மக்கா! குப்பையை தரம் பிரித்துக் கொட்ட தமிழக அரசின் மாஸான விழிப்புணர்வு!

  • சென்னை: தமிழக அரசின் தூய்மை மிஷன் (Clean Tamil nadu Corporation Limited) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்டுடியோ கிறுக்கல் என்ற விளம்பர நிறுவனம் ஆகியவை இணைந்து மக்களிடையே கழிவு மேலாண்மை (Waste Management) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "மக்க நீ மக்கா?" என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

    Advertisement

    கழிவு மேலாண்மை என்பது மிக முக்கியமானதாகும். இது சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சுகாதாரத்தை பேணிகாக்கவும் பயன்படுகிறது. திறந்தவெளியில் குப்பைகளை கொட்டுவதாலும், எரிப்பதாலும் ஈக்கள், கொசுக்கள், பாக்டீரியாக்கள் பெருகி மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை பரப்புகின்றன.

    Advertisement

    மேலும் பிளாஸ்டிக், ரசாயனங்கள், மிக ஆபத்தான கழிவுகள் மண்ணில் கலப்பதால் மண் வளம் சீர்கெடும். நச்சுக்கள் நிலத்தடி நீரில் கலந்து குடிநீரை விஷமாக்குகிறது.

    அது போல் குப்பைகளை எரிப்பதால் டயாக்சின் எனும் நச்சுக்கள் வெளியாகி காற்றில் கலந்து மனிதர்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. எனவே குப்பைகளை தரம் பிரிப்பதால் மறுசுழற்சி செய்து காகிதம், பிளாஸ்டிக் போன்றவற்றை உருவாக்கலாம்.

    அது போல் மண்ணில் கலக்கும் கழிவுகள் கடலில் கலந்தால் கடல்வாழ் உயிரிழங்கள் அழியும். அத்துடன் எல்லா குப்பைகளையும் சேகரித்துச் செல்லும் தூய்மை பணியாளர்கள், நாம் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.

    Advertisement

    ஆம்! குப்பைகளை சேகரித்துக் கொண்டு போய் அவர்கள் தரம் பிரிக்கிறார்கள். இதனால் நமது கழிவுகளில் இருந்து அவர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    இதனால்தான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என குப்பைகளை தரம் பிரித்து கொட்ட சொல்கிறார்கள். பச்சை, நீலம், சிகப்பு, கருப்பு, மஞ்சள், சாம்பல் என 6 நிறங்களில் குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும்.

    பச்சை நிறம்- மக்கும் குப்பைகள், உதாரணமாக காய்கறிகள், பழக் கழிவுகள், மீதமான உணவுகள், தேயிலை தூள், காய்ந்த, வாடிய பூக்கள் உள்ளிட்டவை போடலாம்.

    நீல நிறம்- மக்காத மறுசுழற்சி கழிவுகள். உதாரணமாக பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், காகிதங்கள், அட்டை பெட்டிகள், கண்ணாடி பொருட்கள் போடலாம்.

    Advertisement

    சிவப்பு நிறம்- அபாயத்தை குறிக்கும். பூச்சிக் கொல்லி, மருந்து பாட்டில்கள், பெயிண்ட் டப்பாக்கள், பேட்டரிகள், விளக்குகள் போடலாம்.

    கருப்பு நிறம்- சுகாதாரக் கழிவுகள். அதாவது பயன்படுத்திய மருந்து குப்பிதகள், குழந்தை, பெரியவர்களின் டயாப்பர், சானிட்டரி நாப்கின், பஞ்சு உள்ளிட்டவைகளை போடலாம்.

    மஞ்சள் நிறம்- மருத்துவக் கழிவுகளை போடலாம். ஊசிகள், சிரிஞ்சு, குளுக்கோஸ் பாட்டில்கள், மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யும் உடற்கழிவுகள், ரத்தம் உள்ளிட்டவை போடலாம்.

    சாம்பல் நிறத்தில் மின்னணு கழிவுகளை போட வேண்டும். உடைந்த செல்போன், கம்ப்யூட்டர் பாகங்கள், மின் சாதனங்களை போடலாம்.

    ஆனால் இவை எல்லாவற்றையும் ஒன்றாக போடுவதால் சுகாதாரம் சீர்கெடுகிறது. குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்க மக்க நீ மக்கா என்ற பாடல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    அதாவது மக்க என்றால் மக்கக் கூடிய குப்பைகள், மக்கா என்றால் மக்காத கழிவுகள், இதைதான் இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த பாடலில் 7 வயது சிறுவன் ,தனது வீட்டில் உள்ளவர்கள் குப்பையை தரம் பிரிக்காமல் போடுவதை தட்டி கேட்டு சுட்டிக் காட்டுகிறான்.

    இந்த பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படும். சுற்றுச் சூழலை பாதுகாக்க மக்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    English Summary

    Thooimai Mission has started campaign for waste management. It aims for waste segregation which is important for environment.