சென்னை: சென்னை தி.நகர் என்றால் எப்போதுமே பிஸியாக காணப்படும்.. மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டேயிருக்கும்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் பொதுமக்கள் பலர் தி.நகரில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்கள்.. அப்போது பொதுமக்களின் பணமும் நகையும் திடீர் திடீரென மாயமாகத் தொடங்கின. பைக்குள் பத்திரமாக வைத்திருந்த நகைகளும் பணமும் நொடிப்பொழுதில் காணாமல் போனதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. அதற்குபிறகுதான் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்கள்..
அத்தனை புகார்களும் குவிந்தததால், உடனே களத்தில் இறங்கிய மாம்பலம் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர்... அப்போது 3 பெண்கள், மிகவும் கேஷூவலாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள்..
சாதாரண உடை அணிந்து, கூட்டத்தோடு கூட்டமாக வந்தவர்கள், பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பி நொடிப்பொழுதில் கைவரிசை காட்டியது சிசிடிவியில் பதிவாகியிருந்தது.. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.. இந்த 3 பேரும் யார் என்ற விசாரணையிலும் போலீசார் இறங்கினார்கள்.. லட்சுமிபாய், மீனாட்சி, குஷ்பூ என்றும், இவர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.. இதையடுத்து அந்த 3 பெண்களுக்கும் "த்ரீ ரோஸஸ்" என்று பெயரில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தது.. அப்போதுதான், இவர்கள் தமிழகம் மட்டுமின்றி, ஹைதராபாத், பெங்களூரு எனத் தென்இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குப் பயணம் செய்து, பெரிய நகைக் கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகளை மட்டுமே இலக்காகக் கொண்டு தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளதையும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் கைவரிசை காட்டிவிட்டு தப்பிய இந்த கும்பலின் போட்டோக்களை, தமிழக மற்றும் ஆந்திர போலீசார் அண்டை மாநிலமான புதுச்சேரிக்கும் அனுப்பி அலர்ட் செய்தார்கள்.. இப்படிப்பட்ட நேரத்தில்தான், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் இந்த 3 பெண்களும் இருப்பதாக புதுச்சேரி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது... உடனே மாறுவேடத்தில் போலீசார் அந்த துணிக்கடைக்குள் கஸ்டமர்களை போல நுழைந்தனர்.. அந்த கடையில் திருடுவதற்கு தயாராகி கொண்டிருந்த 3 பெண்களையும் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். பிறகு அவர்கள் சென்னை மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6.44 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டன. இவர்களிடம் விசாரணையும் ஆரம்பமானது.. எங்கெங்கே திருடினார்கள் என்பதையெல்லாம் சொல்வார்கள் என்று நினைத்தால், போலீசாருக்கே தூக்கி வாரிப்போட்டது.. இதில் லட்சுமிபாய் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருக்கிறதாம்.. மற்ற 2 பேர் மீதும் திருட்டு தவிர, பலவிதமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து, கூட்டம் அதிகமாக இருக்கும் நகைக்கடைகள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இவர்கள் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். வடமாநிலத்திலிருந்து கிளம்பி வந்து திருடுவதற்காகவே தென்னிந்திய நகரங்களை அலறவிட்டுள்ளனர் இந்த ஆபத்தான பெண்கள்.. மாறுவேட போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்...!!பிரபல துணிக்கடை தி.நகர்
த்ரீ ரோஸஸ் போட்ட பிளான்
சென்னை டூ புதுச்சேரி
அலற விட்ட பெண்கள்