3 பணக்காரர்களை காதலில் சாய்த்த 29 வயது ஷம்லா! 50 லட்சம் ரூபாய் பிசினஸ்! கேரளா மேரேஜ் பிராடு பின்னணி

  • சென்னை: ஷம்லா என்ற பெண்ணைப் பற்றின பேச்சுதான் கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. ஒரு மிகப்பெரிய திருமண மோசடி கும்பலின் பின்னணியையும் இப்போது அம்பலப்படுத்தி உள்ளனர்.. என்ன நடந்தது கேரளாவில்? யாரிந்த ஷம்லா?

    Advertisement

    எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள எடத்தலா பகுதியை சேர்ந்தவர்தான் 29 வயதான ஷம்லா.. இவர் எந்நேரமும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பாராம்.. இதனால் பெரும்பாவூர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் ஷம்லாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    3 பணக்காரர்கள் - காதல்

    நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்குள்ளும் மிக நெருக்கமான நட்பை தந்துள்ளது. 2 பேரும் செல்போன் நம்பரை ஷேர் செய்து, எந்நேரமும் பேசிவந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் ஷம்லாவை அந்த இளைஞர் அளவுக்கு அதிகமாக நம்பினார்.. அப்போது தன்னுடைய காதலை இளைஞரிடம் சொன்ன ஷம்லா, திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

    அதுமட்டுமல்ல, தான் செய்து வரும் பிசினஸில், ஒரு முக்கியப் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாகவும், இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யுமாறு சொல்லி உள்ளார்.. தன்னை காதலிக்கும் பெண், அதிலும் திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண், இப்படி சொல்லவும், அதன்படியே செய்துள்ளார் இளைஞர்..

    Advertisement

    முதலீடு பிசினஸ்

    கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி முதல் நவம்பர் மாதம் 20ம் தேதி வரையிலான குறுகிய காலக்கட்டத்தில் பல தவணைகளாக மொத்தம் 50 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார்.. வங்கி கணக்கு மற்றும் கூகுள் பே மூலமாக இந்த பணத்தை ஷம்லாவின் அக்கவுண்ட்டுக்கு அனுப்பி உள்ளார்..

    பணத்தை பெற்றுக்கொண்டதுமே ஷம்லாவின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டுள்ளது.. பேச்சிலும் மாற்றம் தென்பட்டுள்ளது.. அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளவும் முன்வரவில்லையாம்.. தன்னுடைய பிசினஸில் பங்குதாரராகவும் சேர்த்துக் கொள்ளவும் இல்லையாம்..

    கேரளா பெண் ஷாம்லி - வாக்குமூலம்

    இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, தன்னுடைய பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல் ஷம்லா தொடர்ந்து காலம் கடத்தி வந்துள்ளார்.. ஒரு கட்டத்தில் தன்னிடம் பணம் கேட்கக்கூடாது என்றும் மிரட்டி வந்துள்ளார்.

    Advertisement

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மஞ்சப்பட்டி வாலிபர் பெரும்பாவூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அனில் குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையிலேயே ஷம்லா திட்டமிட்டுத் திருமணம் மற்றும் தொழில் முதலீடு என்ற பெயரில் ரூ.50 லட்சம் மோசடி செய்தது டிஜிட்டல் ஆதாரங்களுடன் உறுதியானது. இதையடுத்து போலீசார் தலைமறைவாக முயன்ற ஷம்லாவை மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஷம்லாவிடம் போலீசார் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில், அவர் இதே பாணியில் கேரளா முழுவதும் பல வாலிபர்களை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

    Advertisement

    50 லட்சம் ரூபாய்

    சோஷியல் மீடியா மூலம் வசதியான இளைஞர்களை குறிவைத்து, அவர்களிடம் நைசாகப் பேசி, காதல் வலையில் வீழ்த்துவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். மலப்புறம், வயநாடு, கோதமங்கலம் மற்றும் ஆலுவா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதேபோல் பலரிடம் பல லட்ச ரூபாய்களைச் சுருட்டியுள்ளார்.

    கோதமங்கலத்தைச் சேர்ந்த ஒரு நபரிடம் 20 லட்சம் ரூபாயும், ஆலுவாவைச் சேர்ந்த மற்றொருவரிடம் 11 லட்சம் ரூபாயும் ஷம்லா ஏமாற்றியுள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இளைஞர்களை ஏமாற்றிப் பறித்த இந்த கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு ஷம்லா மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் பெரும்பாவூர் போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்...!!

    English Summary

    Three Wealthy Men, ₹50 Lakh and a 29-Year-Old Woman! The Kerala Marriage Business Fraud Case Explained