லாட்ஜ்ஜில் 55 வயது டான்ஸ் டீச்சர் தனலட்சுமி.. கதவை வெளியே பூட்டிட்டு ஓடிய திருச்சூர் ஓவியர்.. ஏன்?

  • சென்னை: திருச்சூர் டான்ஸ் டீச்சருக்கு 55 வயதில் கல்யாண ஆசை வந்து விட்டது.. திருமணமாகி கணவன், 2 பிள்ளைகள் இருந்தும், மனம் தடுமாறி காதலில் விழுந்துள்ளார்.. இந்த முறையற்ற காதலால், ஒரு உயிர் பிரிந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், திருச்சூர் பகுதியில் அந்த அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.

    Advertisement

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குன்னமங்கலம் அருகே உள்ளது சேரூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் தனலட்சுமி.. 55 வயதாகிறது.. இவர் ஒரு டான்ஸ் டீச்சர் ஆவார்.. கல்யாணமாகி, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    Advertisement

    கேரளா திருச்சூர்

    குடும்பத்தோடு வசித்து வந்த தனலட்சுமிக்கு, மலப்புரம் அருகே தேஞ்சிப்பலம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான விக்னேஷ் என்ற விக்கீஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கமான கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது.

    இதையடுத்து, 2 பேரும் அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்தவர்களிடம், வெளியூரில் ஒரு டான்ஸ் புரோகிராமுக்கு செல்வதாக சொல்லிவிட்டு தனலட்சுமி கிளம்பியுள்ளார். ஆனால், அவர் நிகழ்ச்சிக்கு செல்லாமல் நேராக கள்ளக்காதலன் விக்னேஷை சந்தித்துள்ளார்.

    Advertisement

    லாட்ஜ் அறையில் டான்ஸ் டீச்சர்

    அங்கிருந்து 2 பேரும் திருச்சூருக்குச் சென்று, செருதுருத்தி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து ஜாலியாக தங்கியுள்ளனர். அப்போது, மதுபோதையில் இருந்த விக்னேஷிடம், தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு தனலட்சுமி வற்புறுத்தியுள்ளார்.

    தனலட்சுமி எப்போது கல்யாண பேச்சை எடுத்தாலும், அவரைவிட 16 வயது இளையவரான விக்னேஷ், அதனை தட்டிக்கழித்து விடுவாராம்.. அதுபோலவே இப்போதும் கல்யாண பேச்சை டான்ஸ் டீச்சர் ஆரம்பித்ததுமே, "இப்ப வேண்டாம், இன்னும் சில மாதங்கள் போகட்டும், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று கூறி மழுப்பியுள்ளார்.

    16 வயது இளையவருடன் காதல்

    இதை ஏற்றுக்கொள்ளாத தனலட்சுமி, உடனடியாக தன்னைத் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று விக்னேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். தனலட்சுமியின் இந்த வாக்குவாதத்தாலும், தொடர் டார்ச்சராலும் ஆத்திரமடைந்த விக்னேஷ், மதுபோதையில் தனலட்சுமியின் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    Advertisement

    போதை தெளிந்ததுமே, தனலட்சுமி இறந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சியும் பயமும் அடைந்த விக்னேஷ், லாட்ஜ் அறையின் கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டு, யாரிடமும் சொல்லாமல் தனது சொந்த ஊரான மலப்புறத்திற்குத் தப்பி ஓடியுள்ளார்.

    போலீசில் கள்ளக்காதலன் சரண்

    சொந்த ஊருக்கு சென்ற பிறகும்கூட கொலையின் பயம் அவரை விடவில்லை. இதையடுத்து, லாட்ஜ் அறையில் நடந்த சம்பவத்தை விக்னேஷ் தனது சகோதரியிடம் சொல்லி அழுதுள்ளார். விஷயத்தைக் கேட்ட சகோதரி அதிர்ச்சியைடந்து, போலீசில் உடனடியாக சென்று சரணடைவதே நல்லது என்று அட்வைஸ் தந்துள்ளார்..

    இதற்கு பிறகு விக்னேஷ் நேராகத் தேஞ்சிப்பலம் போலீஸ் ஸ்டேஷன் சென்று, தனலட்சுமியைக் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.

    Advertisement

    உடனடியாக தேஞ்சிப்பலம் போலீசார் செருதுருத்தி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த செருதுருத்தி போலீசார், பூட்டியிருந்த லாட்ஜ் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று தனலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்பத்துக்கு சந்தேகம் வரல

    தனலட்சுமி ஆகஸ்ட் 3ம் தேதி லாட்ஜில் கொல்லப்பட்டுள்ளார்.. ஆகஸ்ட் 5ம் தேதி மதியம், அவரது உடல் லாட்ஜிலிருந்து மீட்கப்பட்டது.

    Advertisement

    கொலை செய்யப்பட்ட தனலட்சுமி மலப்புறம் மாவட்டத்தில் உள்ள வேங்கறை என்ற பகுதியைச் சேர்ந்தவராம்.. இவர் டான்ஸ் கற்று தருவதற்காக, அடிக்கடி வெளியூர்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் பயணம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தாராம். அதனால்தான், இப்போது வீட்டிலிருந்து சென்றபோதுகூட, குடும்பத்தினருக்கு இவர் மீது எந்த சந்தேகமும் வரவில்லை.

    கொலையாளி விக்னேஷை பொறுத்தவரை, இவர் ஒரு ஓவியர்,. ஏற்கனவே இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம்.. இதனாலேயே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி புவனேஸ்வரி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

    English Summary

    Thrissur Lodge Dhanalakshmi.. 55 year old Dance Teacher.. Why Did the Painter Lock Her Room and Flee?