தமிழகத்தை உலுக்கிய திருவொற்றியூர் பிளஸ் 2 மாணவர் கொலை வழக்கு.. சக மாணவர்கள் சிக்கினர்.. திடுக் தகவல்

  • சென்னை: சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவன் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை தொடர்பாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    Advertisement

    போலீஸ் விசாரணையில், மாணவர் அடித்துகொல்லப்பட்டதற்கான காரணம் குறித்தும் தெரியவந்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:-

    Advertisement

    அழைத்து சென்று தாக்குதல்

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவனுக்கும், பெயிலாகி தற்போது அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் திருவொற்றியூர் சாத்தாங்காடு மாணவனுக்கும் யார் சீனியர் என்று வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் பிளஸ் 2 மாணவருக்கு ஆதரவாக இறந்து போன தனுஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நேற்று பிளஸ் 2 மாணவர் பள்ளிக்கு வரவில்லை. அதே நேரத்தில் தனுஷ் வீட்டிற்கு செல்ல பஸ் ஏற சென்ற போது பிளஸ் 1 மாணவர், அவரது நண்பர்கள் மற்றும் பள்ளியில் இருந்து இடை நின்ற பழைய மாணவர்கள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் அஜாக்ஸ் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காலி மைதானத்துக்கு அழைத்து சென்று தனுசை தாக்கினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த மாணவன் தனுஷ் அதே இடத்தில் மூச்சுப் பேச்சு இல்லாமல் சுருண்டு விழுந்தாராம்.

    Advertisement

    4 பேர் கைது

    இதை பார்த்ததும் அவனை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள். இதில் அவர் உயிரிழந்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் பிளஸ் டூ மாணவன் சக மாணவர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 பேரை பிடித்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பிளஸ் 1 மாணவரை தேடி வருகின்றனர்.

    வலிப்பு வந்து இறந்தாரா?

    தனுசை தாக்கிய மாணவர்கள், நாங்கள் தனுஷை அடித்தவுடன் அவர் வலிப்பு நோய் வந்து கீழே விழுந்து விட்டார். உடனே அவர் கையில் இரும்பு சாவி கொடுத்து கை, கால்களை தேய்த்து விட்டோம். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை. பயந்து போன நாங்கள் அவரை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டோம் என்று போலீசாரிடம் முதல் கட்ட விசாரணையில் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், மாணவர்கள் கூறுவது உண்மையா? இல்லையா? என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையை உலுக்கிய சம்பவம்

    சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தனுஷ். 16 வயதான இந்த சிறுவன், விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி மைதானம் அருகே தனுஷ் உடலில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார். இதைக் கவனித்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து சென்று போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். மாணவர் தனுஷை 10 க்கும் மேற்பட்ட மணவர்கள் தாக்கி படுபாதக செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. உடனடியாக போலீசார் பிளஸ் 1 மாணவர் உள்பட 10 க்கும் மேற்பட்டவர்கள் மீது அவர்களை தேடி வந்தனர். இந்தசூழலில்தான் முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    English Summary

    Tiruvottiyur: The incident in which a Class 11 student from a government school in Wimco Nagar, Thiruvottiyur, Chennai, was beaten to death by his fellow students has sent shockwaves through the community. Four students have been arrested in connection with this brutal murder, and intensive interrogation is currently underway.