கோட் சூட் போட்ட விவசாயி.. வேளாண் பட்ஜெட்டில் முதல்வர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் வினோத்!

  • சென்னை: மக்களாட்சி எனும் பெரும் மரத்தை பிடித்து நிற்கும் கோட் சூட் போட்ட விவசாயி முதல்வர் விஜய் என்று வேளாண் அமைச்சர் வினோத் பேசியுள்ளார். வேளாண் பட்ஜெட் உரையின் போது சுமார் 6 நிமிடங்களுக்கு விஜய்யை புகழ்ந்து தள்ளிய வேளாண் அமைச்சர் வினோத், சபாநாயகரின் அறிவுரையால் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பின் தாக்கல் செய்யப்படும் முதல் வேளாண் பட்ஜெட் இதுவாகும். ஏற்கனவே விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடி முழுமையாக செய்யப்படாத சூழலில், இன்றைய வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில் வேளாண் அமைச்சர் வினோத் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதில் இருந்தே முதல்வர் விஜய்யை அதிக நேரம் புகழ்ந்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் புகழ்ச்சி ஓவராக சென்ற போது, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலையிட வேண்டிய தேவை ஏற்பட்டது. உடனடியாக பட்ஜெட் உரையை வாசித்தால் போதும் என்று அறிவுறுத்தினார்.

    இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் சபாநாயகருக்கு நோட் அனுப்பி இருந்தன. இதனிடையே வேளாண் அமைச்சர் வினோத் முதல்வர் விஜய்யின் உடை தொடர்பாக ஒரு கருத்தை வேளாண் பட்ஜெட் அறிக்கையில் வாசித்தார். அதில், உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி ஊழல் ஒவ்வொன்றையும் களை எடுத்து சமத்துவம் எனும் செடி வளர்த்து மக்களாட்சி எனும் பெரும் மரத்தை பிடித்து நிற்கும் கோட் சூட் போட்ட விவசாயி முதல்வர் விஜய் என்றார்.

    Advertisement

    தவெக ஆட்சி அமைத்த முதல் ஒரு மாதத்தில் விஜய் கோட் சூட் மட்டுமே அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் வெள்ளிக் கிழமைகளில் பட்டு வேஷ்டி, சட்டை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது கோட் அல்லாமல் சாதாரண சட்டை, பேண்ட் அணிந்தே சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    TN Agri Budget 2026: Agriculture Minister Vinoth Praises CM Vijay as a "Coat-Suit Farmer" Holding Up Democracy