அனைத்து சாதியினரும்! வார்த்தையை விட்ட ஆதவ் அர்ஜுனா.. சேகர் பாபு டென்ஷன்! சட்டசபையில் கருத்து யுத்தம்

  • சென்னை: தமிழக சட்டசபையில் இன்று வழக்கம் போல திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர் பாபுவை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

    Advertisement

    "சேகர் பாபு பெரியார் பெயரை உச்சரிக்கவே கூடாது" என்று காட்டமாக ஆதவ் அர்ஜூனா கூற இதற்கு சேகர் பாபுவும் பதிலடி கொடுத்தார். இன்று காலை முதலே பரபரப்பாக நடைபெற்ற அவை இரவு 7.20 மணி வரை நடைபெற்றது.

    Advertisement

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

    தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. விடுமுறை நாட்கள் நீங்கலாக நாள் தோறும் அவை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சமூகநீதித் துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தில் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூக நீதித்துறை சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    தொடர்ந்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆதி திராவிடர் மக்களுக்கு நன்மை செய்தது யார்? என்ற விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சியில்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று திமுக எம்.எல்.ஏ கோவி. செழியன் கூறினார். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அனைத்து சாதியினரும் அர்ச்சகரலாம் என்ற திட்டத்தை 5 ஆண்டுகளும் அமல்படுத்தினீர்களா? தலித் சகோதரர்கள் எத்தனை பேர் அர்ச்சகராக இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை பதிவு செய்யுங்கள்' என்றார்.

    Advertisement

    சேகர் பாபு பதில்

    அப்போது திமுக உறுப்பினர் சேகர் பாபு எழுந்து நீதிமன்றத்தில் இருக்கும் இந்த வழக்கை சுட்டிக் காட்டினார். பின்னர் அவர், இதற்காக உச்ச நீதிமன்றத்தில் 3 மூத்த வழக்கறிஞர்கள் நியமித்து சட்ட போராட்டத்தை நடத்தினோம். ஆட்சிக்கு பின்னரும் சட்ட போராட்டத்தை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம்.

    ஆகமம், ஆகமம் இல்லாத கோயில்களை முடிவு செய்வதற்கான பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. எனவே நீங்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

    பெரியார் பெயரை உச்சரிக்க கூடாது

    அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுந்து, "நாங்கள் உறுதியாக இந்த வழக்கில் வெற்றி பெற்று பெரியார் வழியில் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம். சில மதவாதிகளின் அழுத்தத்தால் இவர்களே வழக்கை போட சொல்லி இவர்களே திட்டத்தை நிறுத்தினார்கள். எனவே பெரியார் பெயரை சேகர் பாபு இனிமேல் உச்சரிக்கவே கூடாது" என்றார்.

    Advertisement

    உடனே எழுந்த சேகர் பாபு, 'இந்த வழக்கை பொறுத்தவரையில் மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுப்படுத்த கூடிய சக்திகள்தான் உச்ச நீதிமன்றத்தில் தடைபெற சென்றது. திராவிட கொள்கைகள், சிந்தாந்தத்தை கொண்ட நாங்கள் முழுமையாக எதிர்த்தோம்' என்றார். முன்னதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    English Summary

    Aadhav Arjuna: A verbal clash erupted today in the Tamil Nadu Assembly between members of the DMK and the TVK, as is often the case. Speaking on the initiative to allow individuals from all castes to serve as temple priests, Minister Aadav Arjuna sharply criticized DMK MLA and former Minister for Hindu Religious and Charitable Endowments, Sekar Babu.