சண்டைக்கு வர்றீங்களா? உட்காருங்க.. அமைச்சர் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்த எம்எல்ஏ! சபாநாயகர் காட்டம்

  • சென்னை: சட்டசபையில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பேசும் போது, அவரது பேச்சுக்கு எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது, உட்கார மறுத்து எழுந்து நின்ற ரிஷிவந்தியம் தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனை பார்த்து என்ன அவருடன் சண்டைக்கு வர்றீங்களா? உட்காருங்க என்று கொஞ்சம் அழுத்தமாக சபாநாயகர் கூறினார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின் மூன்றாவது நாளான இன்றும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் அவை சென்று கொண்டு இருக்கிறது. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபத்திற்குரிய வகையில் பேசினால், உடனே குறுக்கிட்டு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடவடிக்கை எடுப்பதை பார்க்க முடிகிறது.

    Advertisement

    சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

    அமைச்சர்களின் பேச்சுகள் கூட அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இந்த சூழலில்தான் இன்றைய கூட்டத்தொடரின் போது நீட் தேர்வுக்கு எதிராக அவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான விவாதத்தின் போது அமைச்சர் விஸ்வநாதன் பேசும் போது, எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினரை சபாநாயகர் கடிந்து கொண்டார். இது பற்றிய விவரங்கள் வருமாறு:

    காமராஜராகத்தான் இருக்க வேண்டும்

    அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், "காமராஜரிடம் பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். முதல்வராக நீங்கள் பொறுப்பேற்றுள்ளீர்கள். பத்திரிகைக்கு சொல்ல வேண்டிய தகவல் என்ன? என்று.. காமராஜரும் பத்திரிகையாளர்களை சந்தித்து சொன்ன முதல் தகவல் என்ன தெரியுமா? தமிழகத்தில் கல்வி அறிவு இல்லாத கடை கோடி மனிதன் கூட இருக்க கூடாது. கல்வி அறிவு இல்லாத படிப்பறிவு இல்லாத எந்த மனிதரும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது.

    Advertisement

    ஆனால், கல்வி அறிவு, படிப்பறிவு கிடைக்க கூடிய கடைகோடி மனிதனாக யார் இருக்க வேண்டும் தெரியுமா? படிக்க தெரியாத காமராஜராகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். கடைகோடி மனிதர் என்றால் யார்.. கிராமப் புறத்தில் இருந்து வரும் மாணவி, மாணவன். இன்று நீட் தேர்வுக்கு மாணவர்கள் போராடுகிறார்கள். நீட் தேர்வை எதிர்த்து ராகுல் காந்தி போராட்ட களத்தில் நின்று கொண்டு இருக்கிறார் என்ற செய்தியை கூறுகிறேன்.. டெல்லியில் நின்று கொண்டு இருக்கிறார்" என்றார்.

    என்ன சண்டைக்கு வருகிறீர்களா?

    அமைச்சர் இவ்வாறு சொன்னதும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் சைடில் இருந்து அமளி ஏற்பட்டது. விஸ்வநாதன் பேச்சுக்கு சில எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் எழுப்பினர். இதனை பார்த்த சபநாயகர் ஜேசிடி பிரபாகர், உட்காருங்க.. ஒழுங்கீனமாக நின்றால் நடவடிக்கை எடுப்பேன். உட்காருங்க.. உட்காருங்க.. என்ன சண்டைக்கு வருகிறீர்களா? அவருடன்.. என்று ரிஷிவந்தியம் தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனை கடுமையாக எச்சரித்தார்.

    Advertisement

    அவரை பார்த்து உட்காருங்க.. உட்காருங்க! என்று என கொஞ்சம் காட்டமாக கூறினார். இதற்கு மத்தியில் ஆளும் கட்சி தரப்பில் இருந்து எம்.எல்.ஏ ஒருவர் எழுந்ததால், அவரையும் சமாதானப்படுத்தி உட்காருங்கள் என்றார். உட்காராவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்" என்றார். இதன் பிறகு எம்.எல்.ஏக்கள் சமாதனம் ஆனதால் அவை தொடர்ந்து நடைபெற்றது.

    English Summary

    Speaker JCD prabhakar: When Congress Minister Viswanathan was speaking in the Legislative Assembly, some MLAs stood up to express their opposition. Speaker JCD Prabhakar attempted to pacify them. Addressing one MLA who refused to sit down, the Speaker said somewhat sternly, "Are you looking to pick a fight with him? Sit down."