மேகதாது பிரச்சனை.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

  • சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வரை போல் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாதது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு அரைகுறை தள்ளுபடி செய்தது ஏன்? என்றும் கேட்டுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் தவெக அரசு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பொது பட்ஜெட்டை ஆகஸ்ட் 5ஆம் தேதியும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தது. இந்த நிலையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கி இருக்கிறது. அதேபோல் சட்டசபை கூடியுள்ள நிலையில், மறைந்த உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    Advertisement

    அதன்படி இயக்குநர் பாக்யராஜ், எழுத்தாளர் புவியரசு, எழுத்தாளர் பூமணி, பாடகி ஜானகி மற்றும் முன்னாள் எம்எல்ஏ சுருளிவேல் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின் காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், காவிரியில் தண்ணீர் வராததால், டெல்டாவில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் மேகதாது விவகாரத்தில் தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் டெல்லி சென்று வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தி இருந்தோம்.

    Advertisement

    மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். மேகதாது விவகாரத்தில் தீர்மாஅம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. அதேபோல் முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு அரைகுறை தள்ளுபடி செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆட்சேபம் தெரிவித்தார்.

    English Summary

    TN Assembly: Udhayanidhi Stalin Raises Question in TN Assembly Over Crop Loan Waiver Promise