அச்சுறுத்தும் புற்றுநோய்.. அசத்தல் திட்டத்தை அறிவித்த அமைச்சர்! ரூ.100 கோடி ஒதுக்கீடு!

  • சென்னை: தேசிய அளவில் புற்றுநோய் பாதிப்பில் தமிழ்நாடு 5து இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 83,000-93,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், புற்றுநோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க 5 மண்டலங்களில் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருக்கிறார்.

    Advertisement

    ரூ.100 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

    Advertisement

    புற்றுநோய்க்காக மக்கள் அதிக அளவில் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. வசதி இருப்பவர்கள் செலவு செய்கிறார்கள். இல்லாதவர்கள் மரணமடைகிறார்கள். இந்த நிலைமை இனியும் நீடிக்க கூடாது என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக 5 மண்டலங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது.

    மொத்தமாக மக்கள் நல்வாழ்வு துறைக்கு என ரூ.23,357 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருக்கிறார்.

    தமிழகத்தின் நிலை

    சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரைசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் முதன் முறையாக புற்றுநோய் பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியிருக்கிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் நமது மாநிலத்தில் புற்றுநோய் பாதிப்பு 30% அதிகரித்திருக்கிறது என்று அடையாறு புற்றுநோய் நிறுவனம் மற்றும் தமிழக சுகாதாரத்துறை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

    Advertisement

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஒட்டுமொத்த பாதிப்புகளில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மாவட்ட அளவில் பார்த்தால் சென்னை முதல் இடத்திலும் அதை தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

    பெண்களை பொறுத்தவரை மார்பக புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகிறது. 1 லட்சம் பெண்களில் 28.5 பேருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இது தவிர கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது அரியலூர், பெரம்பலூர், தருமபுரி மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகம். பெருங்குடல் புற்றுநோயும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆண்களை பொறுத்தவரை வாய்வழி புற்றுநோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    Advertisement

    புகையிலை, உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இரைப்பை, குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களும் ஆண்களை அதிக அளவில் பாதிக்கின்றன.

    English Summary

    Regional Cancer Centres: Tamil Nadu ranks fifth nationally in terms of cancer incidence, with 83,000 to 93,000 people affected by the disease each year. Against this backdrop, Finance Minister Maria Wilson has announced that cancer treatment centers will be established across five zones.