தமிழ்நாட்டுக்கு வந்து இறங்கியதுமே பிரதமர் மோடியை வாழ்த்திய முதல்வர் விஜய்! வார்த்தைகளை கவனிச்சீங்களா

  • சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். "வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர்" எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் விஜய்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பிய நிலையில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

    விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu Chief Minister Joseph Vijay has extended his birthday wishes to Prime Minister Narendra Modi. In his message, Vijay described the PM as someone working with dedication towards the goal of building a strong India.