ரொம்ப விமர்சிச்சிட்டேன் சார்.. நேரில் சந்திக்கும் போது சாரி கேட்ட விஜய்! போட்டு உடைத்த ஸ்டாலின்

  • சென்னை: தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தன்னிடம் விஜய் தன்னிடம் சாரி கேட்டதாகவும், அதையெல்லாம் விடுங்க ப்ரதர்.. இனி நீங்க முதலமைச்சர்.. எனவே யாரைப் பற்றி பேசும் போதும் கண்ணியத்தோடு பேசுங்கள் என்று கூறினேன் என்று வீடியோவில் கூறியுள்ளார்.

    Advertisement

    மு.க ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    ரொம்ப சாரி சார்

    நீங்க முதலமைச்சர் ஆனது என்னை சந்திக்க வீட்டுக்கு வந்தீங்க. அப்போது உங்களை கரம் பிடித்து வரவேற்றேன். அப்போது நாம பேசும்போது நீங்க எங்கிட்ட, தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை விமர்சித்து பேசிவிட்டேன். ரொம்ப சாரி சார் என்று சொன்னீங்க. அதற்கு நான் பரவாயில்லை பிரதர்.. நான் அதையெல்லாம் மனசில் வைச்சுக்கல.. இப்போது நீங்க ஒரு மாநிலத்துடைய முதலமைச்சர்.. யாரைப் பற்றி பேசும் போதும் நீங்க கண்ணியத்தோடு பேசுங்கள் என்று கூறினேன். இதையெல்லாம் நீங்க மறந்துட்டீங்க போல..

    திரும்பவும் சொல்கிறேன்.. ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோடு உங்க வார்த்தைகளும், உடல்மொழியும் இருக்க வேண்டும். நாம தான் மக்களுக்கு முன்னுதாரணம். அதை நாம் மறந்துவிட கூடாது. நீங்க வகிக்கின்ற பெரிய பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். சட்டசபையைவே ரீல்ஸ் எடுக்கின்ற இடமாக மாற்றினது.. நாங்க கட்டின பாலம் மேலேயே நின்று போட்டோ ஷூட் பண்ணுறது என ஆட்சி நிர்வாகத்தையே சினிமா ஷூட்டிங் மாதிரியே நடத்துறீங்க..

    Advertisement

    இப்போது அந்தர் பல்டி

    ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றிக் கொண்டு இருக்கீங்க.. ஆனால் ரியாலிட்டி என்ன? உண்மை ஊரை தாண்டுவதற்குள், பொய் உலகத்தையே சுற்றி வந்துவிடும் என்று சொல்வார்களே அது போல தான் நடந்துகொண்டு இருக்கிறது. உங்க ஆட்சியில் தினம் தினம் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கு. பரந்தூர் ஏர்போர்ட்டை ரத்து செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை 15 வருஷத்திற்கு பின்னாடி கொண்டு போய் இருக்கீங்க..

    விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என வாக்குறுதி கொடுத்தீங்க.. ஆனால் அதையும் ஒழுங்கா பண்ணவில்லை. அனைத்து குடும்பத்திற்கும் வருஷத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என சொன்னீங்க. ஆனால் இப்போது அந்தர் பல்டி அடித்து தகுதி உள்ளவங்களுக்கு மட்டும் என சொல்லி 3 சிலிண்டர்கள் தான் இலவசம் என்று கூறியிருக்கீங்க.. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 சொன்னீங்க.. ஆனால் இப்போதும் நாங்க கொடுத்த அதே ரூ.1,000 தான் கொடுக்கீங்க.

    Advertisement

    உண்மையாக என்ன மாற்றம் நடந்துருக்கு?

    இன்னும் பல வாக்குறுதிகள் பற்றி வாயை திறக்காமல் இருக்கீங்க.. அப்போது சொன்னது எல்லாம் ஒன்னு.. இப்போது செய்யுறது எல்லாம் ஒன்னு.. மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்கள்.. குறிப்பாக நமது இளைஞர்கள் உண்மையாகவே என்ன மாற்றம் வந்து இருக்கிறது என்று இது சரியான மாற்றமா என கவனியுங்கள். எது நிர்வாக திறமை உள்ள அரசு.. எது திறமையில்லா அரசு என்பதை நீங்க புரிந்துகொள்ளுங்கள்" என்றார்.

    English Summary

    MK Stalin Video: In a video, former Chief Minister M.K. Stalin recounted that after TVK leader Vijay assumed office as Chief Minister, he visited Stalin at his residence in Alwarpet, Chennai, to seek his blessings. Stalin mentioned that Vijay apologized to him during the meeting, to which he replied, "Let bygones be bygones, brother... You are the Chief Minister now; so, please speak with dignity whenever you talk about anyone."