CM vijay: லண்டனில் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? சொகுசு வசதிகளை பாருங்க

  • சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், லண்டன் நகரில் உள்ள ஆடம்பரமான சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். இந்த கட்டிடத்திலிருந்து ஒட்டு மொத்த லண்டனையும் காண முடியும் என கூறப்படுகிறது. இந்த ஹோட்டலில் உள்ள சொகுசு வசதிகள், ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் என்ன போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    தமிழக முதவர் விஜய் லண்டன் சென்றுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 6 நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதல்வர் விஜய், லண்டனில் உள்ள, 'ஷாங்க்ரி-லா தி ஷார்ட்' என்ற நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியுள்ளார்.

    Advertisement

    ஐரோப்பாவின் உயரமான கட்டிடடம்

    லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தி ஷார்ட் கட்டிடத்தில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. கட்டிடத்தின் 34-வது தளம் முதல் 52-வது தளம் வரை ஸ்டார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் மிகவும் பிரபலமான ஹோட்டல்களில் ஒன்றாக இது உள்ளது. ஐரோப்பாவின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான "தி ஷார்டில்' அமைந்துள்ளதால், நட்சத்திர ஹோட்டல்களின் அறைகளில் இருந்து தேம்ஸ் நதி மற்றும் லண்டனின் நகரை ரசிக்க முடியுமாம். இந்த தங்கும் விடுதியில் 185 அறைகள், 14 டீலக்ஸ் அறைகள் மற்றும் 3 சிறப்பு எக்ஸ்கியூட்வ் அறைகள் உள்ளன.

    Advertisement

    இந்த நட்சத்திர ஹோட்டலில், உணவகங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள், பிரைவேட் பார்ட்டிகளுக்கான உணவகங்கள், பெரு நிறுவனங்களுக்கான கூட்ட அரங்குகள் என பல வசதிகளும் நிறைந்துள்ளதாம். கிளைமேட் மற்றும் லைட் கண்ட்ரோல் வசதிகள், அதாவது வெளியில் எந்த மாதிரியான கிளைமேட் இருந்தாலும் ஹோட்டலுக்குள் அது பிரதிபலிக்காத வகையில் பிரத்யேக லைட்டிங் வசதிகள், தானியங்கி பிளாக் அவுட் திரைகள் உள்ளிட்டவைகள் இதன் அறையில் உள்ளன.

    ஒரு நாள் கட்டணம் எவ்வளவு?

    ஐரோப்பாவில் உள்ள உயரமான கட்டிடங்களின் வரிசையில் இந்த கட்டிடம் 7-வது இடத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். இந்த கட்டிடத்தில் இருந்து பார்த்தால் மொத்த லண்டன் நகரின் அழகையும் ரசிக்க முடியுமாம். அப்படி என்றால் எவ்வளவு உயரம் இருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.. இந்த கட்டிடத்தில் உள்ள உயரமான இடத்தில் இருந்தபடி லண்டன் நகரை ரசித்தபடியே உணவு அருந்தும் ஹோட்டல், நீச்சல் குளங்களும் இருக்கின்றன.

    Advertisement

    இவ்வளவு ஆடம்பரமான இந்த சொகுசு விடுதியில் தங்குவதற்கு ஒருநாள் கட்டனம் எவ்வளவாம் தெரியுமா? இந்திய மதிப்பில் 96 ஆயிரம் முதல் ரூ.2.70 லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று அந்த ஹோட்டலின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 52 தளங்களை கொண்ட இந்த கட்டிடத்தில், விஜய் தங்கியிருக்கும் தி ஷார்டில் விடுதி 34 தளங்களை கொண்டுள்ளது. முதல்வர் விஜய் தங்கியுள்ள இந்த சொகுசு விடுதி முன்பாக அவரை பார்க்க லண்டனில் வசிக்கும் தமிழர்கள் வெளியில் காத்திருக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

    கார் ரேஸை தொடங்கி வைக்கிறார்

    லண்டனில் உள்ள தமிழர்களை முதல்வர் விஜய் வரும் 15 ஆம் தேதி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய் இன்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் ரேஸ் மைதானத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் ரேசை பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைக்கிறார். இதில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு தொடங்கி இரவு 11.45 மணிக்கு இந்த கார் பந்தயம் நிறைவு அடைகிறது.

    English Summary

    CM Vijay, who has traveled to London to attract industrial investments, is staying at a luxurious hotel in the city. It is said that the entire city of London is visible from this building. Details regarding the hotel's luxury amenities and the cost of a one-night stay have been revealed.