உப்பு சப்பே இல்லை.. கையில் தரப்பட்ட டிராப்டை பார்த்து கடுப்பான விஜய்.. உடனே ஓடிய அதிகாரிகள்!

  • சென்னை: சுதந்திரத் தினத்தன்று கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய். கொடியேற்றி விட்டு நாட்டுமக்களுக்கு செய்திகள் சொல்லும் வகை யில் அவர் உரையாற்றுவார். இதில் அவர் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

    Advertisement

    அந்த உரை தமிழக மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத் தும். தேசிய அளவில் அதாவது மத்திய அரசுக்கும் ஒரு மெசேஜ் சொல்வது போல சிலபல சங்கதிகளும் இருக்கும்.

    Advertisement

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி - கொடியேற்றும் உரிமை

    சுதந்திரத் தினத்தில் தேசம் முழுக்க ஒவ்வொரு முதலமைச்சரும் கொடியேற்றுவார்கள். மாநில முதலமை ச்சர்கள் தேசிய கொடியேற்றி மக்களுக்கு உரையாற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    அவர் பெற்றுத்தந்த உரிமையின் பேரில் தான் சுதந்திரத்தினத்தில் மாநில முதல்வர்கள் கொடியே ற்றுகிறார்கள். இந்த உரிமை கிடைப்பதற்கு முன்பு சுதந்திரத்தினத்திலும் மாநில கவர்னர்கள் தான் கொடியேற்றி வந்தனர். ஆனா ல் அதை மாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

    சுதந்திரத் தினத்தில் பிரதமர் எப்படி தேசிய கொடி ஏற்றுகிறாரோ அப்படி!

    அதனை மாற்றி, சுதந்திரத் தினத்தில் பிரதமர் எப்படி தேசிய கொடியேற்றி மக்களுக்கு உரையாற்று கிறாரோ அதே உரிமை முதலமைச்சர்களுக்கும் வேண்டும் என போராடி அதனைப் பெற்றத் தந்தவர் கருணாநிதி. இப்போது நாடு முழுக்க முதல்வர்கள் கொடி ஏற்ற காரணமாவே கருணாநிதிதான். இதனை திமுக ஆட்சியில் ஒவ்வொரு சுதந்திரத்தினத்தின் போது திமுக தலைவர்கள் நினைவு கூர்வார்கள்.

    Advertisement

    இப்படிப்பட்ட பின்னணியில் முதல்முறையாக சுதந்திரத்தினத்தில் கொடியேற்றி மக்களுக்கு உரையாற்றுகிறார் முதல்வர் விஜய். முதல்வரின் சுதந்திரத் தின உரையில் என்னென்ன புதிய விசயங்களைச் இடம்பெறச் செய்யலாம் என முதல்வரின் ஆலோசகர்களிடம் விவாதித்துள்ளனர் அரசு அதிகாரிகள். விஜய் வெறுமனே பேசினால் சரியாக இருக்காது.. முக்கிய அறிவிப்பு இருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

    விஜய் உரையில் இடம்பெறவேண்டிய செய்திகள் : முக்கிய அறிவிப்பு

    இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யுடன் இது குறித்து விவாதித்த ஆலோசகர்கள், சில விசயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். இதனையடுத்து அவரின் உரையில் இடம்பெறவேண்டிய செய்திகள் குறித்து ஒரு ட்ராப்ட் தயாரித்து அவரின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

    Advertisement

    மசாலா அறிவிப்புகள் வரலாம்

    அதில் சில மாற்றங்களை முதல்வர் விஜய் செய்திருக்கிறாராம். ஃபைனல் ட்ராப்ட் தயாரிக்கும் பணியில் அதிகாரிகளோடு இணைந்து வேகமாக இயங்கி வருகிறார்கள் ஆலோசகர்கள். இதில் அவர் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இல்லை. பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் எதிர்பார்த்தும் அது உப்பு சப்பு இல்லாமல் இருந்துவிட்டது. இதனால் சுதந்திர தின் உரையை நல்ல காரமாக.. நிறைய மாசாலா அறிவிப்புகளோடு மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் எதிர்பார்க்கிறாராம்.

    விஜய்யின் சுதந்திர தின உரை தயாரிக்கப்படுகிறது

    கடந்த காலங்களில் முதல்வர்களாக இருந்த அரசியல் ஆளுமைகளின் சுதந்திர தின உரையை படித்துப்பார்த்து அதிலிருந்தும் பாயிண்டுகளை குறித்து வைத்துக்கொண்டு விஜய்யின் சுதந்திர தின உரை தயாரிக்கப்படுவதாகவும் ஒரு தகவல் கோட்டையில் சீக்ரெட்டாக உலாவுகிறது. முதல்வர் விஜய்யின் உரையில் ஏதேனும் புதிய அறிவிப்புகள் இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    TN CM Vijay wants a special spicy speech draft for his first Independance day