சென்னை: காவிரி உரிமையை கேட்டு பெற டெல்லி சென்ற விவசாயிகள் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். இது குறித்து முதல்வர் சி.ஜோசப் விஜய் மௌனம் காப்பது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
நீட் தேர்வை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு, அதற்கு எதிராக போராடிய மாணவர்களை தவெக தலைமையிலான அரசு கைது செய்திருந்தது. இதற்கு எதிராக விஜய் பேசவில்லை.. இப்படி இருக்கையில், விவசாயிகள் விஷயத்திலும் மௌனம் காப்பது சரிதானா? என்று அரசியல் தலைவர்கள் கேட்க தொடங்கியிருக்கின்றனர்.
ஜூன் மாதம் திறந்திருக்க வேண்டிய மேட்டூர் அணை, ஆகஸ்ட் மாதம் பிறந்தும் கூட இன்னும் திறக்கவில்லை. காரணம், கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வராதததுதான். காவிரி நீர் மீது தமிழ்நாட்டிற்கு இருக்கும் உரிமையை காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் என இரண்டும் உறுதி செய்திருந்தது. 15 நாட்களுக்கு 4.5 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று இரண்டு அமைப்புகளும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை கர்நாடகா இதுவரை ஏற்கவில்லை. எனவே, தமிழகத்தின் கடைமடை மாவட்டங்களுக்கு தண்ணீர் வரவில்லை. உத்தரவை ஏற்காத கர்நாடாகவை சும்மா விட்டுவிட முடியுமா? எனவே விவசாயிகள் காவிரி உரிமைக்காகவும், அவர்களின் மற்ற கோரிக்கைகளுக்காகவும் டெல்லி சென்று அமைதியான முறையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். நேற்றைய தினம் விவசாயிகள் பயணித்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சென்றபோது, அம்மாநில காவல்துறையினரால் விவசாயிகள் வலுக்கட்டாயமாக ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்டு, மாற்று ரயிலில் தமிழகம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு சென்று வேண்டுமானாலும் அமைதியான முறையில் போராட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இப்படி இருக்கையில் தமிழக விவசாயிகளை ஏன் காவல்துறையினர் தடுத்து அனுப்பினர்? இந்த விஷயம் குறித்து விஜய் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீட் விவகாரத்திலும் விஜய் இப்படித்தான் செய்தார் என்றும் விமர்சித்திருக்கின்றனர். நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக மொத்த நாடும் கொந்தளித்திருந்த நேரம் அது. தமிழ்நாடுதான் நீட் போராட்டங்களுக்கு முன்னோடி. அப்படி இருக்கும்போது.. தமிழக்தில் போராட்டங்கள் வெடிக்காதா என்ன? வெடித்தது.. மாணவர்கள் ரோட்டுக்கு வந்தனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை என மாநிலம் முழுவதும் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. நீட் தேர்வுக்கு எதிராக இருப்பதாக சொல்லும் தவெக அரசு, இந்த போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காமல், போராடுபவர்களை கைது செய்ய முயன்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "ரோட்டில் போராடினால் கைது செய்யப்படதான் செய்வார்கள்" என்று கூறினார். சரி போராட்டம் நடத்த அனுமதி கொடுங்கள் என்று கேட்டால்.. காவல்துறை இழுத்தடித்தது. கூட்டணி கட்சி தலைவர்களின் அழுத்தங்களுக்கு பின்னர் ஒரு வழியாக அனுமதி கிடைத்தது. இதற்கிடையில், கல்வி நிலையங்களுக்குள் புகுந்து மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கியிருந்தனர். ஆனால் கடைசி வரை நீட் விவகாரம் குறித்து விஜய் வாய் திறக்கவில்லை. இப்படியாக நீட் விஷயத்திலும் சரி, விவசாயிகள் விஷயத்திலும் சரி.. முதல்வர் விஜய் வாய் திறக்காமல் இருப்பது சரிதானா? என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.காவிரி உரிமை
டெல்லி போராட்டம்
திருப்பி அனுப்பப்பட்ட விவசாயிகள்
நீட் விஷயத்தில் விஜய்
விஜய் தலைமையிலான காவல்துறை