“பட்ஜெட் கூட்டத்தொடரில் ஊழல் பட்டியலை தாக்கல் செய்யப்போகிறோம்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் பேட்டி

  • சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் ஊழல் பட்டியலை தாக்கல் செய்ய உள்ளதாக தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி அமைச்சரின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் தவெக அரசு, தமது முதல் பட்ஜெட்டை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது. அறம், பொருள், இன்பம் என மூன்று பகுதிகளாக அரசின் நலத்திட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    ஒவ்வொரு துறை அமைச்சரிடமும் ஆலோசித்து, அந்தத் துறையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, முதல்வரின் நேரடி வழிகாட்டுதலின்படி, பட்ஜெட்டைத் தயாரித்து வருகிறார் நிதி அமைச்சர் மரிய வில்சன். இந்த பட்ஜெட்டில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி, பள்ளிக்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

    மேலும் அரசின் புதிய திட்டங்கள் எளிய மக்களுக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் பயனுள்ள வகையில் அமைக்க வேண்டும் என்பதில் தவெக அரசு கவனம் கொண்டுள்ளது. கடந்த திமுக, அதிமுக ஆட்சிகளின் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து பட்ஜெட்டில் தெளிவான வகையில் திட்டங்கள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இந்நிலையில், "வரப்போகும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நீங்கள் நிச்சயமாக பார்ப்பீர்கள். தனியாக ஒரு ஆடிட்டிங் செய்துள்ளோம். அந்த ஊழல் பட்டியலை தாக்கல் செய்யப்போகிறோம். அதில் தெரியும். துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ, பார்ட்டி ஃபண்ட் என்னது என்னது எனக் கேட்டு வந்தார். என்னவொரு நடிப்பு. நாங்கள் ஊழல் பட்டியலை தாக்கல் செய்யும்போது தெரியும்." என தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

    மேலும் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், 2029-ல் நடக்கப்போகும் மாற்றத்தை இந்தியாவே பார்க்கப்போகிறது. அப்போது நீட் ஒழிக்கப்படும் எனக் கூறினார். இதன் மூலம் தவெக தேசிய அரசியலில் கவனம் செலுத்தப் போவதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu Finance Minister Marie Wilson has announced plans to table a list of corruption cases during the state's budget session.