5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தென்காசி, கரூர் மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பிக்கள் நியமனம்!

  • சென்னை: தமிழக அரசு ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக சஞ்சய் மாத்தூர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று மாற்றப்பட்டுள்ளனர்.

    Advertisement

    காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி சஞ்சய் மாத்தூர், மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக சஞ்சய் மாத்தூர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    காவல்துறை தலைமை அலுவலகத்தின் ஐ.ஜியாக சோனல் சந்திரா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தாம்பரம் காவல் ஆணையரகம் பள்ளிக்கரணை உதவி காவல் ஆணையர் ரகுபதி, கரூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக இருந்த ஸ்டாலின் ஐபிஎஸ், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தென்காசி மாவட்ட எஸ்.பியாக இருந்த அசோக் குமார், மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    English Summary

    Tamil Nadu government has issued orders transferring 5 IPS officers. Sanjay Mathur, IPS, has been appointed as the Head of the State Crime Records Bureau, while Stalin, IPS, has been appointed as the Superintendent of Police for Tenkasi district.