தீபாவளிக்கு மறுநாள்.. நவம்பர் 9ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

  • சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி அரசு விடுமுறை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் நவம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் புது ஆடைகள் வாங்க தொடங்கிவிட்டனர். அதற்கேற்ப அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் பொதுமக்களின் ஷாப்பிங் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஸ்வீட், பட்டாசு, ஆடைகள், புதிய படங்கள் என்று மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல் தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து பல்வேறு தரப்பினரும் சொந்த ஊருக்கு புறப்பட திட்டமிட்டுள்ளனனர். நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், பொதுமக்கள் வியாழக்கிழமை முதலே பயணத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி அரசு விடுமுறை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் நவம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நவம்பர் 9ஆம் தேதி விடுமுறை நாளினை ஈடு செய்ய நவம்பர் 28ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தீபாவளிக்கு 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்களும், மாணவர்களும், தொழிலாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை வழங்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. திமுக ஆட்சியில் இருந்த நடைமுறையை தவெகவும் பின்பற்றி வருவதாக பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருவதால் ஒரு நாள் அரசு விடுமுறை குறைந்துவிட்டதே என்று பலரும் வருத்தத்தில் இருந்தனர். அதற்கேற்ப இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    TN Govt Issues Order Declaring Public Holiday on November 9, Day After Diwali