அண்ணன் சீர் திட்டம்.. பட்டுப்புடவை, தங்க நாணயம் வாங்க டெண்டர் கோரிய தமிழக அரசு.. என்னென்ன விதிகள்?

  • சென்னை: அண்ணன் சீர் திட்டத்திற்கு தேவையான தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 3வது வாரத்தில் டெண்டர் பணிகள் முடிவடைந்து கொள்முதல் ஆணை வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    Advertisement

    2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டம் கொரோனா பரவலுக்கு முன்பே போதிய நிதி இல்லாததால் கைவிடப்பட்டது. தற்போது தவெக ஆட்சி அமைத்த சூழலில், அண்ணன் சீர் திட்டம் என்ற பெயரில் மகளிருக்கு திருமணத்திற்காக ஒரு பட்டுப் புடவை மற்றும் ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலுக்கு முன் தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் இந்த திட்டம் தொடர்பாக கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குள் வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு திருமணத்தின் போது அண்ணன் சீர் வழங்கப்பட உள்ளது.

    தவெக தேர்தல் வாக்குறுதியில் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ள குடும்பங்களுக்கு அண்ணன் சீர் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் ரூ.2.5 லட்சமாக வருமான வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பின. இந்த நிலையில் அண்ணன் சீர் திட்டத்திற்காக பட்டுப் புடவை மற்றும் ஒரு சவரன் தங்கம் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

    Advertisement

    அந்த டெண்டரில் தங்க நாணயம் 22 கேரட் மற்றும் 916 ஹால்மார்க் முத்திரையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டுப்புடவையை பொறுத்தவரை சில்க் மார்க் மற்றும் ஹேண்ட்லூம் மார்க் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டெண்டர் பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதத்தில் கொள்முதல் ஆணை வழங்கப்படும் என்று தெரிகிறது. டிசம்பர் மாதம் 8ஆம் தேதிக்குள் டெண்டர் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    TN Govt Issues Tenders for Gold Coins and Silk Sarees Under ₹812 Crore 'Annan Seer' Scheme