பள்ளிக்கரணை சதுப்பு நில அளவை 128.19 எக்டேர் ஆக சுருக்கிய அரசு.. பூவுலகின் அமைப்பு எதிர்ப்பது ஏன்?

  • சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மொத்தம் 165 நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அவை முற்றிலுமாக காணாமல் போயுள்ளன. அவற்றை மீட்பது கடினமென்றாலும் எஞ்சியிருக்கும் நீர்நிலைகளையும் சதுப்பு நிலங்களையுமாவது பாதுகாக்க அரசு முன்வர வேண்டாமா?பள்ளிக்கரணையின் ZoI-ஐ 128.19 ஆக சுருக்கியது மிகவும் கண்டனத்திற்குரிய அர்த்தமற்ற செயல். த.வெ.க. அரசு இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பூவுலகின் அமைப்பு வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    பூவுலகின் அமைப்பு வெளியிட்ட பதிவில், "பள்ளிக்கரணை சென்னையின் முக்கியமான வெள்ளநீர் வடிநிலமாகும். தற்போது அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் என்பது பெரும்பாலும் ஏற்கெனவே சதுப்பு நிலத்தில் சேரும் கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் மட்டுமே.இதை மட்டுமே Zone of Influence என ஏற்றுக்கொள்ள முடியாது. பெருமழை காலங்களில் இந்த வடிகால்கள் வழியாக மட்டுமே பள்ளிக்கரணைக்கு வெள்ளநீர் வருவதில்லை. பல்வேறு பாதைகள் வழியாகவும் வெள்ளநீர் வந்தடைகிறது.

    Advertisement

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மொத்தம் 165 நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அவை முற்றிலுமாக காணாமல் போயுள்ளன. அவற்றை மீட்பது கடினமென்றாலும் எஞ்சியிருக்கும் நீர்நிலைகளையும் சதுப்பு நிலங்களையுமாவது பாதுகாக்க அரசு முன்வர வேண்டாமா?பள்ளிக்கரணையின் ZoI-ஐ 128.19 ஆக சுருக்கியது மிகவும் கண்டனத்திற்குரிய அர்த்தமற்ற செயல். த.வெ.க. அரசு இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

    முன்னதாகநேற்று பூவுலகின் அமைப்பு வெளியிட்ட பதிவில், "ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு முந்தைய தி.மு.க. ஆட்சியில் முன்மொழியப்பட்ட 1 கி.மீ. Zone of Influenceஐ அதாவது ஏறத்தாழ 3000 எக்டேரைத் த.வெ.க. அரசு 128.19 எக்டேராகக் குறைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

    Advertisement
    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கிமீ நீளத்திற்கு சுற்றுச்சுவர்.. அன்புமணி கடும் எதிர்ப்பு

    ஒரு ஈரநிலம் அல்லது ஈரநிலத் தொகுப்பின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் எங்கெல்லாம் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது அது அந்த ஈர நிலத்தில் பாதிப்பை எற்படுத்துகிறதோ அப்பகுதிகள் அனைத்தும் ZoI என்கிற "தாக்க மண்டலம்" என வரையறுக்கப்பட வேண்டும்.

    ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (IMP) தயாரிக்கும் பணியை NCSCM மேற்கொண்டு வருகிறது. ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும் செயல்முறையின்போதே தாக்கமண்டலம் வரையறுக்கப்பட வேண்டும். தாக்கமண்டலத்திற்கான வழிகாட்டுதல்கள்/ஒழுங்குமுறைகளும் IMPயின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

    Advertisement
    தீபாவளி சிறப்பு ரயில்கள்.. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரைக்கு குட்நியூஸ்

    ஆனால், IMP பணிகளும் தாக்க மண்டலம் வரையறுக்கும் பணிகளும் முடிவடைவதற்கு முன்னரே இடைக்கால தாக்க மண்டலத்தை 128.19 எக்டேராகச் சுருக்குவது பள்ளிக்கரணையை எவ்விதத்திலும் பாதுகாக்காது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கான IMP தயாரிக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அதுவரைக்கும் தற்போது அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் தாக்க மண்டலத்தைத் தவிர்த்து பிற பகுதிகளில் கட்டற்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அது சரிசெய்ய முடியாத பேராபத்தாகவே முடியும்.

    Advertisement

    நாளை சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. தமிழ் நாடு அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் பரப்பை தாக்க மண்டலமாக ஏற்றுக்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம். தமிழ் நாட்டில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற இன்னும் பல சதுப்பு நிலங்கள் சட்டப்பூர்வமாக ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட வேண்டிய நிலையில் அரசின் இந்த நிலைப்பாடு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கவல்ல இம்முடிவைத் தமிழ் நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Reducing the Zone of Influence (ZoI) of Pallikaranai to 128.19 is a highly condemnable and senseless move. The 'Poovulagin Nanbargal' organization has urged the government to withdraw this decision immediately.