கருணை அடிப்படையில் வேலை வழக்கு: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்லும் தமிழக அரசு!

  • சென்னை: கரூர் அரசு பணி ரத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தகவல் தெரிவித்துள்ளார். கரூர் நெரிசலில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

    Advertisement

    கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி சமீபத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார்.

    Advertisement

    கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விசாரணையின் முடிவில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அரசு நினைத்தால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சிக்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சாதாரண பணி தான் வழங்கியதாக கூறுவதை ஏற்க முடியாது. எனவே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

    Advertisement

    இந்நிலையில், கரூர் அரசு பணி ரத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தகவல் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணி ஆணை பெற்றவர்களின் வாதங்களைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    Minister CTR Nirmal Kumar has announced that the Tamil Nadu government plans to file an appeal in the Supreme Court tomorrow regarding the cancellation of government jobs. High Court Madurai Bench had quashed the government order granting govt job to the families of those who died in the Karur stampede incident.