செல்போன் வாங்க ரூ.10,000.. மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் திட்டம்

  • சென்னை: தமிழகத்தில் மின்சார ரீடிங் எடுக்கும் 7,500 கணக்கீட்டாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், மொபைல் ஆப் மூலம் கணக்கீடு செய்ய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 உதவித்தொகையும், CUG சிம் கார்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் வீடு, வணிக நிறுவனங்களில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் துல்லியமாக மீட்டர் ரீடிங் எடுக்க மொபைல் போன் செயலியைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஊழியர்களுக்கு புதிய மொபைல் போன், சிம் கார்டு வாங்குவதற்காக ரூ. 10,000 வழங்கவுள்ளது. மின்சார வாரியத்தின் இந்த நவீனமயமாக்கல் நடவடிக்கை ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக கட்டிடங்கள் என அனைவருக்கும் மின்சார வாரியம் மின்சாரத்தை வழங்கி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மின்சார வாரியம் நிர்ணயித்து வருகிறது. மின் வாரியத்தின் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் துல்லியமாக மீட்டர் ரீடிங் எடுக்க மொபைல் போன் செயலியைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, மின்சார பயன்பாடு கணக்கீடு செய்யும் ஊழியர்களின் பணியை எளிதாக்கவும், டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும் ஊழியர்கள் புதிய மொபைல் போன், சிம் கார்டு வாங்குவதற்காக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் ரூ.10,000 வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

    Advertisement

    மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு தங்குதடையற்ற இணைய சேவை மற்றும் அழைப்பு வசதிக்காக போஸ்ட் பெய்ட் சியுஜி சிம் கார்டுகளும் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, நுகர்வோரின் மின் பயன்பாட்டு விவரங்களை உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யவும் வழிவகை ஏற்படுத்தப்படும்.

    இந்தத் தொகையானது ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும். தற்போது, சில இடங்களில் மின்சார ரீடிங் எடுக்காமலயே, அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாக புகார்கள் எழுந்து வரும் சூழலில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    English Summary

    A new scheme has been introduced in Tamil Nadu to reduce the workload of 7,500 electricity meter readers by enabling them to record readings via a mobile app. Tamil Nadu Government has announced that, for this purpose, employees will be provided with a financial assistance of ₹10,000 to purchase a mobile phone, as well as a CUG SIM card.