அமைச்சர் கீர்த்தனாவின் அறியாமை! ஆந்திரா, கர்நாடகா ஏர்போர்ட் கட்டுவது கூட தெரியாதா? விஜய்க்கு சிக்கல்

  • சென்னை: ஆந்திர மாநிலத்தின் குப்பம் பகுதியில் அமைக்கப்படவுள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரில் 2வது சர்வதேச விமான நிலையத் திட்டங்கள் தொடர்பான செய்திகளை, இவையெல்லாம் வெறும் சமூக வலைதள வதந்திகள் மட்டுமே என சட்டமன்றத்தில் பேசியிருப்பது தொழில் துறை வட்டாரங்களிலும் பொருளாதார வல்லுநர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களின் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த முறையான தகவல்களோ, ஆவண ஆதாரங்களோ கூட தெரியாமல் ஒரு மாநிலத்தின் தொழில் துறை அமைச்சர் பேசியிருப்பது மிகவும் கவலையளிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    குப்பத்தில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்

    உண்மை நிலவரப்படி, ஆந்திரப் பிரதேச அரசு சித்தூர் மாவட்டம் குப்பத்தில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ பணிகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. ஆந்திர விமான நிலையங்கள் மேம்பாட்டுக் கழகம் (APADCL), அமராவதி, ஸ்ரீகாகுளம் மற்றும் குப்பம் ஆகிய மூன்று இடங்களில் புதிய விமான நிலையங்களை அமைப்பதற்காகத் தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை (TEFR) தயாரித்து, முதற்கட்டமாக ரூ. 5,545 கோடி நிதியொதுக்கீட்டுடன் திட்ட முன்மொழிவுகளை ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் (MoCA) ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

    Advertisement

    குப்பம் விமான நிலையத்துக்காக சுமார் 1,250 ஏக்கர் நிலத்தைக் கண்டறிந்து, முதற்கட்டப் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது.

    இதேபோல, கர்நாடக அரசு பெங்களூரில் 2வது சர்வதேச விமான நிலையத்திற்கான இடத்தை இறுதி செய்யும் பணியில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், இந்திய விமான நிலையங்கள் ஆணயத்துடன் (AAI), Boston Consulting Group (BCG) மற்றும் IDeCK ஆகிய ஆலோசகர்களுடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தி, 7 சாத்தியமான இடங்களை ஆய்வுக்காகப் பரிந்துரைத்துள்ளார்.

    குறிப்பாக, தமிழ்நாட்டின் ஓசூர் எல்லைக்கு மிக அருகில் உள்ள கனகபுரா சாலை மற்றும் நெலமங்கலா பகுதிகள் இதில் முக்கியப் பரிசீலனையில் உள்ளன.

    Advertisement

    இத்தகைய சூழலில், அண்டை மாநிலங்களின் உள்கட்டமைப்பு முன்னேற்றங்களை.. சமூக வலைதள வதந்தி.. இதற்கெல்லாம் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா.. ஆதாரம் காட்டுங்கள்.. ஆதாரம் இல்லாமல் பேசாதீர்கள் என்று கீர்த்தனா பேசியுள்ளார். அண்டை மாநிலங்களில் நடக்கும்.. அதுவும் எல்லையில் நடக்கும் பெரிய விஷயங்கள் பற்றிய புரிதல் கூட இல்லாமல் அறியாமல் இருக்கிறார்.

    கீர்த்தனாவின் தொடர் செயல்கள்

    கீர்த்தனாவின் தொடர் செயல்கள் தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளும் செயலாகவே பார்க்கப்படுகிறது. சென்னை-பெங்களூர் தொழில் துறை வழித்தடத்தில் அமைந்துள்ள ஓசூர், மின்சார வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக வேகமாக உருவெடுத்து வரும் நிலையில், அங்கு வான்வழிப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

    Advertisement

    எனவே, தொழில் துறை அமைச்சகமும் அதன் ஆராய்ச்சிப் பிரிவும் அண்டை மாநிலங்களின் உள்கட்டமைப்பு நகர்வுகளை முறையாகக் கண்காணித்து, தமிழகத்தின் எல்லைப்புற தொழில் வட்டாரங்களின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே தொழில் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது. இல்லையென்றால் தமிழ்நாடு கடைசியில் அண்டை மாநிலங்களில் கையேந்தும் அவலம் ஏற்பட்டுவிடும்.. மினிஸ்டர் கீர்த்தனா மேடம்!

    English Summary

    TN Industries Minister Keerthana Under Fire Over Kuppam & Bengaluru 2nd Airport Remarks