பேசாமலே சாதித்த விஜய் மக்கள் இயக்கம்.. நாம் தமிழரை விட அதிக இடங்களில் முன்னிலை- எப்படி சாத்தியமானது?


  • சென்னை: 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளை விட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.

    Advertisement

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலையில் இருந்து வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் திமுக 136 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

    Advertisement

    1381 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் 971 இடங்களில் திமுகவும், 195 இடங்களிலும் அதிமுகவும், 5 இடங்களிலும் அமமுகவும், 35 இடங்களில் பாமாவும் முன்னிலை வகிக்கிறது.

    1000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற 90 வயது பாட்டி - எதிர்த்து நின்றவர்களுக்கு டெபாசிட் காலி

    விஜய் மக்கள் இயக்கம்

    இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் இவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்க கொடியை வைத்தும், விஜயின் புகைப்படத்தை வைத்தும் பிரச்சாரம் செய்ய விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களுக்கு அனுமதி அளித்து இருந்தது. மொத்தம் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

    வெற்றி

    அதாவது மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களில் இவர்கள் போட்டியிட்டனர். இதில் மாவட்ட கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி எதிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றிபெறவில்லை. மற்றபடி பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

    எத்தனை

    இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் புதிய சாதனை படைத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

    தேர்தல் வெற்றி

    ஏனென்றால் இவர்கள் பெரிய கட்சி பின்னணியை கொண்டவர்கள் கிடையாது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். உள்ளூர் அளவில் பிரபலமான நபர்களாக இருப்பதால்தான் இவர்களுக்கு தேர்தலில் வெற்றி கிடைத்து இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு இது ஒரு வகையில் நல்ல சிக்னலாக பார்க்கப்படுகிறது. எப்படி தேமுதிகவை தொடங்கிய காலத்தில் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் ஆழம் பார்த்தாரோ அதேபோல்தான் தற்போது விஜய் ஆழம் பார்த்து அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

    நாம் தமிழர்

    அதிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77 பதவிகளை பெற்றதன் மூலம் நாம் தமிழர் கட்சியை விட அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் வென்று உள்ளனர். நாம் தமிழர் கட்சி எந்த விதமான மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவியிலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டிலும் நாம் தமிழர் எந்த இடத்திலும் வெல்லவில்லை. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழரை விட இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வருகின்றன. முழு முடிவுகள் வெளியாகும் போதும் நிலைமை மாறலாம். பெரிய அளவில் பிரச்சாரம், பேட்டி எதுவுமே இல்லாமல் சத்தமே இன்றி விஜய் மக்கள் இயக்கம் இந்த சாதனையை செய்துள்ளது.

    வார்த்தை போர்

    இது இணையத்தில் தற்போது நாம் தமிழர் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் வார்த்தை போரை உண்டாக்கி உள்ளது. நாம் தமிழரை விட நாங்கள் அதிக இடங்களில் வென்றுவிட்டோம் என்று விஜய் மக்கள் இயக்கத்தினரும், விஜய் ரசிகர்களும் இணையத்தில் ட்வீட் செய்து கொண்டாடி வருகிறார்கள். இதற்கு நாம் தமிழர் தரப்போ, நடிகர்களை பார்த்துதான் இப்போதும் தமிழர்கள் வாக்களிக்கிறார். களத்தில் நிற்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

    எப்படி சாத்தியமானது

    தனிப்பட்ட வகையில் பாமகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் பெரிய கட்சியாக இந்த தேர்தலில் பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இந்த தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ளனர். இதற்கு நிர்வாகிகளின் தனிப்பட்ட பிரபலம் காரணமாகவும், வீடு வீடாக பிரச்சாரம் காரணமாகவும் விஜய் மக்கள் இயக்கம் இந்த வெற்றியை பெற்று இருக்கலாம். அதோடு இதில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் ஏற்கனவே ஊரக அளவில் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் என்பதும் அந்த இயக்கத்திற்கு தேர்தலில் சாதகமாக இருந்தது.

    English Summary

    Tamilnadu Local Body Election Result: How Vijay Makkal Iyakkam performed well in this time in 9 districts?