எம்எல்ஏக்கள் 71% சம்பள உயர்வு.. அரசுக்கு ரூ.17 கோடி கூடுதல் செலவு.. யார் வீட்டு பணம் விஜய் சார்

  • சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்னிறுத்தி, பல்வேறு வாக்குறுதிகளையளித்து ஆட்சிக்கு வந்தனர். மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. அரசின் கடனும் ரூ.10 லட்சம் கோடியை தாண்டி சென்றுள்ளது. ஆனால் தவெக அரசு எம்எல்ஏக்களுக்கு ரு.71 சதவிகிதம் சம்பள உயர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் உள்ள எம்எல்ஏக்களுக்கு கடந்த காலங்களில் ரூ.25,000 சம்பளம் வழங்கப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு அந்த சம்பளம் ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு அது ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டு எம்எல்ஏக்களின் சம்பளம் ரூ.55,000 ஆக உயர்த்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எம்எல்ஏக்களின் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்த்தப்பட்டது.

    Advertisement

    71 சதவிகிதம் உயர்வு

    சுமார் 50 சதவிகிதம் உயர்வு கிடைத்தது. இதுதவிர எம்எல்ஏக்களுக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன. தொகுப்புப்படி, செல்போன் படி, வாகனப்படி, மருத்துவம், விமானம் ரயில் பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன. அலுவலக உதவியாளரை நியமிப்பதற்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக எம்எல்ஏ ஆனவர்களுக்கு இலவச கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். காருக்கு ஓட்டுநரை நியமித்து, எரிபொருளுடன் ரூ.75,000 வழங்கப்படுகிறது.

    இவை எல்லாம் மாத சலுகைகளாகும். இந்த முறை இந்த மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் எம்எல்ஏக்களுக்கான சம்பளம் 71 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மாதம் ரூ.1.05 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக சம்பளம் உயர்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இந்த தொகை விடுவிக்கப்படும். இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதனால் எம்எல்ஏக்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

    Advertisement

    மாதம் ரூ.75,000

    பொதுப்பணித்துறை அரசு செயலாளர் சுந்தரவள்ளியின் அறிவிப்புக்கு, ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கர் ஒப்புதல் கொடுத்துள்ளார். மாதம் ரூ.25,000 சலுகைகள் பெற்ற எம்எல்ஏக்கள், இப்போது ரூ.75,000க்கு மேல் பெறவுள்ளனர். இந்த கூடுதல் சலுகையால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.17 கோடி செலவு ஏற்படும். அரசுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சம் கோடி உள்ளது. தவெக ஆட்சிக்கு வந்தும் புதிய கடன் பெறப்பட்டு வருகிறது. ஆனால் தவெக அரசு கடன் குறைவாக கூறியுள்ளது. எம்எல்ஏக்களுக்கான சம்பளம் உயர்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டிற்கு ஸ்வீட் செய்யாதீர்கள் என்று திமுகவை விஜய் விமர்சித்திருந்தார். இப்போது மக்கள் வரிப்பணத்தில் அரசுக்கு செலவை ஏற்படுத்துவது விமர்சனமாகியுள்ளது. இது யாருடைய பணம் சிஎம் சார் என்று திமுகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English Summary

    Tamilnadu Government hiked MLAs salary to 71%. CM Vijay's announcement came in GO sparked controversy.