தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்!


  • சென்னை: பெட்ரோல் பங்குகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஒரு நாள் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி எச்சரித்துள்ளார்.

    Advertisement

    கடந்த 31ம் தேதி தூத்துக்குடியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது நடத்தப்பட்டிருந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனை கண்டித்துதான் தற்போது இந்த விற்பனை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையில் உள்ள அரசரடி எனும் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருந்தது. அன்று மாலை பெட்ரோல் போடுவதற்கு பைக்கில் 4 பேர் வந்திருக்கிறார்கள். நல்ல போதையில் இருந்த அந்த கும்பலை சேர்ந்த ஒருவர், பெட்ரோல் பங்க் மீது சிறுநீர் கழித்திருக்கிறார். இதை தடுத்த ஊழியர்களை ஆபாசமாக பேசி தாக்க முயற்சித்திருக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள், ஒரு மணி நேரம் கழித்து 10 பேருடன் வந்து பங்கை சூறையாடியுள்ளனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் தொடர்பாக பங்க் ஊழியர், தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "தூத்துக்குடி அரசரடி பங்க்கில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் குடி, கஞ்சா போதையில் இருந்திருக்கின்றனர். எனவேதான் இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    என்ன சம்பவம் நடந்தது என்பதை ரெக்கார்ட் செய்வதற்குதான் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்ட ஹார்டிஸ்கை போலீசார் எங்கள் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக வாங்கி சென்றிருக்கிறார்கள். எனவே எதிர்காலத்தில் இப்படியான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ஊழியர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் நாங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 7000 பெட்ரோல் பங்குகள் ஒரு நாள் விற்பனை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இப்படி இருக்கையில், இந்த பிரச்சனையை சரி செய்ய ஒரு நாள் விற்பனை நிறுத்தத்தை தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் அறிவித்திருப்பது தவெக அரசுக்கு நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.

    ஆட்சியமைந்து இன்னும் ஒரு மாதம் கூட முழுசா ஆகல.. அதுக்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை இவ்வளவு பெரிய நெருக்கடியை கொடுக்கும் என்று விஜய் உட்பட எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனவே இந்த பிரச்சனையை சீக்கரமாக தீர்வு காண காவல்துறை அதிகாரிகளுக்கு விரைவில் பிரஷ் போகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English Summary

    Petrol: K.P. Murali, President of the Tamil Nadu Petrol and Diesel Dealers Association, has warned that petrol pumps across Tamil Nadu will remain closed for one day to condemn the series of attacks being carried out against employees working at petrol stations.