டெல்லி: டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை முடக்க மத்திய அரசு எடுத்த அதே சர்வாதிகாரப் பாதையை, தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் காவல்துறையும் கையில் எடுத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு எப்படி டெல்லியில் போராட்டக்காரர்களைத் துரத்தித் துரத்தி கைது செய்ததோ, அதேபோல ஒரு முன்கூட்டிய உளவுத்துறைத் திட்டத்துடன் சென்னையிலும் CJP அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்களை தமிழகக் காவல்துறை கூண்டோடு சிறைபிடித்துள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்தும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) விடுத்த அழைப்பின் பேரில், நாடு முழுவதும் ஆதரவுப் போராட்டங்கள் வெடித்தன. சென்னையின் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை அருகே, டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக CJP ஒருங்கிணைப்பாளர் ராதிகா கணேஷ் தலைமையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தி போராடத் தொடங்கினர். ஆனால், அவர்கள் முழக்கங்களை எழுப்பும் முன்பே, நூற்றுக்கணக்கான போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல அவகாசமோ, முறையான அறிவிப்போ தராமல், தனியார் வேன்களில் அவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாகத் தூக்கிப் போட்டு இழுத்துச் சென்றனர். இதில் பெண்களையும் மாணவர்களையும் காவல்துறை மிகக் கடுமையாக கையாண்டதாகவும், தள்ளுமுள்ளுவில் ஒரு போராட்டக்காரரின் மண்டை உடைந்து படுகாயமடைந்ததாகவும் சக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாஜக அரசின் காவல்துறையை விட ஒரு படி மேலே போய், செல்போனில் வீடியோ எடுத்த பொதுமக்களையும் விடாமல் தவெக காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. அங்கு நடைபயிற்சிக்கு வந்த சந்தீப் ஜார்ஜ் என்ற பேட்மிண்டன் விளையாட்டு வீரர், அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்ததற்காகவே தவறுதலாகப் பிடிக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்டார். அவர் இன்று முக்கிய பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டியவர் என்று கூறியும் கூட, "இனி எந்தப் போராட்டத்திலும் பங்கேற்க மாட்டேன்" என்று அவரிடம் வலுக்கட்டாயமாக எழுதி வாங்கிய பிறகே போலீசார் அவரை விடுவித்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட CJP உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சென்னை போராட்டத்தை ஒடுக்கிய விதம், இது தற்செயலாக நடந்த நடவடிக்கை அல்ல என்பதைக் காட்டுகிறது. டெல்லி காவல்துறை எவ்வாறு விமான நிலையத்திலேயே விமானத்திற்குள் புகுந்து அபிஜித் திப்கேவை கைது செய்ததோ, அதே பாணியில் சென்னையிலும் உளவுத்துறை முன்கூட்டியே திட்டமிட்டு, இளைஞர்கள் கூடும் இடங்களை அடையாளம் கண்டு முழுப் படையாகக் குவிந்துள்ளது. பாஜக அரசுக்கு எதிராக அமைதியான ஜனநாயகப் போராட்டம் நடக்கும்போது, ஒரு மாநில அரசு மக்களுக்கான கருத்து சுதந்திரத்திற்கு வழிவிடாமல், ஒன்றிய அரசின் ஏஜென்ட் போல செயல்பட்டு ஒடுக்குமுறை கையாள்வது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்: அமைதியான முறையில் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுத்த இளைஞர்களை கைது செய்தது அப்பட்டமான பாசிச நடவடிக்கை என்றும், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கனிமொழி காட்டம்: "டெல்லியில் இருப்பது பாஜக என்றால், தமிழகத்தில் இருப்பதும் அதே பாஜகதான். தவெக அரசு ஒன்றிய அரசின் நீட்சியாகவே செயல்படுகிறது" என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காட்டமாக விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் தமிழகம் தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ளன. மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடும் சொந்த மாநில இளைஞர்களை, காவல் துறையை வைத்து அடக்குவது எந்த வகையான மக்களாட்சி? ஒன்றிய அரசு தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்கும் மாநில சுயாட்சி உரிமையைப் பேச வேண்டிய ஒரு அரசாங்கம், தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை மறைக்கத் துடிக்கும் மத்திய அரசுக்கு துணை போவது ஏன்? டெல்லியின் சர்வாதிகார நிழல் இன்று சென்னை கடற்கரை வரை நீண்டிருப்பது தமிழக மக்களுக்கு மாபெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.சென்னையில் என்ன நடந்தது?
வேடிக்கை பார்த்தவர்களுக்கும் கைது: உச்சக்கட்ட கெடுபிடி
உளவுத்துறையின் முன் தயாரிப்பு: பாஜகவின் பி-டீமா தவெக?
மிஷன் அதிமுக.. மீண்டும் கையில் எடுக்கும் எஸ்பி வேலுமணி.. பாஜக ஆதரவுடன் நடக்கப்போகும் சம்பவம்?
கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்: "டெல்லியில் பாஜக, தமிழகத்தில் தவெக"
டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக.. தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக.. கனிமொழி ஆவேசம்!
மக்கள் கேட்கும் கேள்வி: யாருக்காக இந்த பயம்?