விஜய்யின் டபுள் கேம்! கொந்தளித்த மாணவர்கள்.. தவெக அரசு இப்படியா செய்யனும்? கிளம்பும் எதிர்ப்பு

  • சென்னை: டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி அமைப்பினர் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த தவெக, டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தும்போது, அவர்களை போலீஸை வைத்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று சமூக செயற்பாட்டாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

    Advertisement

    நீட் தேர்வு, சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள் காரணமாக ஏராளமான மாணவர்கள் உயிரை விட்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது.

    Advertisement

    நாடாளுமன்றம் நோக்கி பேரணி

    ஜூலை 20ம் தேதி வரைதான் டைம்.. அதுக்குள்ள தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்.. இல்லை எனில் நாடாளுமன்றத்தை நாங்கள் முற்றுகையிடுவோம் என்று போராடும் மாணவர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், வழக்கம் போல அரசு, இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. மாணவர்கள் சும்மா விடுவாங்களா? ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள் தடுப்புகளை மீறி ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்.

    மாணவர்கள் காயம்

    போராட்டத்தை தடுக்க பேச்சுவார்த்தை நடத்த முன் வராத மத்திய அரசு, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மாணவர்களை கலைக்க முயன்றது. இதில் 21 வயது மாணவி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நூற்றுக்கணக்கான மாணவர்களும் காயமடைந்திருக்கின்றனர்.

    Advertisement

    தமிழக காவல்துறை

    இதையடுத்து மாணவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தமிழ்நாட்டில் இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) போன்ற இடதுசாரி மாணவர், அம்பேத்கர் மாணவர் அமைப்புகள் சென்னை, மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கின்றனர்.

    முன்னதாக டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது தவெக. ஆனால் இப்போது, கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக போராடும் மாணவர்களை கைது செய்கிறதே? இது என்ன நியாயம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

    Advertisement

    சிபிஎம் எதிர்ப்பு

    தவெக அரசுக்கு ஆதரவு தெரவித்திருந்த சிபிஎம், "நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் அடக்குமுறைகளை மீறி மாணவர்களின் போராட்டம் இரவு - பகலாக‌ தொடர்ந்து நடைபெறுகிறது. டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதும், தடுப்பதும், கைது செய்வதும் வன்மையான கண்டனத்திற்குரியது.

    காவல்துறைக்கு கண்டனம்

    நேற்று மாலை DYFI -SFI சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து இரவு 10மணிக்கு மேல் விடுவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்குவதை ஒரு போதும் ஏற்கமுடியாது. போராட்டத் தீ பரவட்டும்." என கண்டனம் தெரிவித்திருக்கிறது.

    English Summary

    Vijay's Dual Stance: Social activists have expressed outrage that TVK—which had previously extended its support to the protest organized by the 'Cockroach Party' in Delhi—has seen students protesting in Chennai in solidarity with those in Delhi get arrested by the police.