முதல்வர் விஜய்யின் காவல்துறை மானியக் கோரிக்கையில் 'தவறான' தகவல்.. போட்டித் தேர்வர்கள் ஷாக்!

  • சென்னை: காவல்துறை மானியக் கோரிக்கையில் போலீஸ் எஸ்.ஐ தேர்வு தொடர்பான தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு உடல் திறன் தேர்வே நடத்தப்படாத நிலையில் அதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. காவல்துறை, தடய அறிவியல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் 59 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார்.

    Advertisement

    காவல்துறை மானியக் கோரிக்கை புத்தகத்தில், காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு உடல் திறன் தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு கடந்த 2025 டிசம்பர் 21 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சுமார் 1.78 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

    Advertisement

    இந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் மட்டும் உடல் உறுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதுவரை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகள் வெளியான பின்பே, உடல் உறுதி தேர்வு நடத்தப்படும் என்ற நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கையில் இடம்பெற்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தனியார் பயிற்சி மைய நிறுவனர் நடராஜ் பேசுகையில், "சென்ற 2025 ஆம் ஆண்டு ஏப்ரலில், 1352 பணி இடங்களுக்கான நேரடி உதவி காவல் ஆய்வாளர் இடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியானது. அதன் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    இந்த ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய வெப்சைட்டில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, எழுத்துத் தேர்வு முடிவுகளில் மென்பொருள் கோளாறு என்றும் முடிவுகள் மீண்டும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வழக்குகள், தேர்தல் என வந்துவிட்டன.

    Advertisement

    எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 1: 5 என்ற அடிப்படையில் 6,750 பேரை உடல் தகுதித் தேர்வுக்கு அழைப்பார்கள். இன்று காவல்துறை மானியக் கோரிக்கையில் இரண்டாம் கட்ட உடல் திறன் தேர்வை நடத்திவிட்டோம், இதற்குரிய ரிசல்ட்டை வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

    இப்போது வரை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் வெளியான இந்த தவறான தகவலால் போட்டித் தேர்வு எழுதும் மாணவ - மாணவியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கு மறுப்புத் தெரிவித்து சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் இந்த குறிப்புகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவும் சபாநாயகர் உத்தரவிட வேண்டும்." எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    English Summary

    A controversy has arisen over the publication of incorrect information regarding the Police Sub-Inspector (SI) recruitment in the police department's demand for grants. It has caused a stir that the results for the SI posts are set to be announced soon, even though the physical test has not yet been conducted.