சென்னை: தமிழகத்தில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்ததில் இருந்தே, புதிய அமைச்சர்களின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. "மக்களுக்கான நேர்மையான அரசு" என்ற முழக்கத்துடன் வந்த புதிய ஆட்சியில், அடுத்தடுத்து கிளம்பும் சர்ச்சைகள் அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளன.
அரசு ஒப்பந்தங்களில் கமிஷன் பெறப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தற்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் அமைச்சர் ரூ. 10 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட சொகுசு பங்களா (வில்லா) வாங்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே குறிப்பிட்ட அந்தப் பெண் அமைச்சரைக் குறிவைத்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆரம்பத்தில் அவர் ரூ. 4 கோடி மதிப்பில் சொகுசு வீடு வாங்கியதாகத் தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால், சில நாட்களிலேயே அந்தத் தொகை திடீரென ரூ. 10 கோடியாக மாற்றப்பட்டு, அவரின் ஊர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக பிரம்மாண்டமான பங்களா ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் றெக்கைக் கட்டிப் பறக்கத் தொடங்கின. அதிகாரத்திற்கு வந்த மிகக் குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய தொகைக்கு சொத்து வாங்குவது எப்படி சாத்தியம்? அரசு ஒப்பந்தங்களுக்குப் பெறப்பட்ட கமிஷன் பணம்தான் இந்த சொகுசு பங்களாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? என்று எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளன. ஏற்கனவே இந்த பெண் அமைச்சரின் தந்தை, அரசுத் துறையின் பாலம் மற்றும் சாலை ஒப்பந்தங்களுக்கு ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை லஞ்சம் கேட்டதாக ஒப்பந்ததாரர்கள் மத்தியில் புகார்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி, கோயில் ஒன்றிற்கு சென்றபோது அவர் அணிந்திருந்த நகை மற்றும் ஆடம்பர பொருட்கள் தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்கள் கிளம்பின. இதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த ரூ. 10 கோடி பங்களா விவகாரமும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அமைச்சர் தரப்பு இதை மறுத்தாலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. வெறும் மறுப்பு அறிக்கை மட்டும் போதாது; புதிய அமைச்சர்களின் சொத்து விவரங்களை முழுமையாக லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சரிபார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். "புகைச்சல் இல்லாமல் தீ எரியாது; உண்மை நிலையை அரசுதான் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்" என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுகள் வரிசையாக எழுவது, விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. உண்மை என்னவென்பதை வெளிப்படையான விசாரணை மூலம் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயத்தில் தவெக தலைமை இருக்கிறது. இதுபோன்ற தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால், கட்சியின் தூய்மையான அரசியல் பிம்பத்திற்கு அதுவே பெரிய சவாலாக அமையும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.ரூ. 4 கோடியில் தொடங்கி ரூ. 10 கோடியாக உயர்ந்த விவகாரம்:
விஜய்யின் பெரியம்மா முதியோர் இல்லத்தில் வசித்தது ஏன்? 92 வயதில் காலமான அமல் ராஜசேகரன்!
பின்னணியில் இருக்கும் பிற சர்ச்சைகள்
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்விகள்
கோவையில் கைதி தப்பியோட்டம்.. விஜய்யின் போக்கிரி பட டயலாக்கை சொல்லி எடப்பாடி விமர்சனம்
மக்கள் எதிர்பார்ப்பும் விஜய்யின் நிலைப்பாடும்