பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்!

  • சென்னை: பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பல திட்டங்கள் டெண்டர் மூலம் தனியாருக்கு விடப்படுவது வழக்கம். ஆனால், ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமான நிறுவனங்களுக்கு மட்டும் திட்டங்களை ஒதுக்குவதால், பல திறமையான காண்ட்ராக்ட் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த பிரச்சனையை சரி செய்ய புதிய விதிமுறைகளை தமிழக அரசு வகுத்திருக்கிறது.

    Advertisement

    பாலம் கட்டினால் 10 நாட்களிலேயே விரிசல், அரசு மாணவர்கள் விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து, திறப்பதற்கு முன்னரே பள்ளி கட்டிடங்களில் விரிசல் என பல செய்திகளை தொடர்ந்து வந்துக்கொண்டேதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் டெண்டர் எடுக்கும் காண்ட்ராக்ட் நிறுவனங்களின் கொள்ளை என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    புதிய விதிமுறைகள்

    பிரச்சனை என்னவெனில், இப்படியான நிறுவனங்களுக்கே தொடர்ந்து டெண்டர் கொடுக்கப்படுவதாகவும், டெண்டர் பெறும் நிறுவனங்கள் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களாகவே இருக்கின்றன என்றும் பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த முறைகேடுகளை தடுக்க தற்போது தமிழக அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது. இந்த விதிமுறைகள் குறித்து பொதுப்பணித்துறை செயலாளர் விடுத்திருக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

    தகுதியான நிறுவனங்கள்

    ஒப்பந்ததாரர் தேர்வில் போட்டியை குறைப்பதற்காக, தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிப்பது அல்லது தனி நபருக்கு ஏற்ப நிபந்தனைகளை விதிப்பதை தவிர்க்க வேண்டும்

    ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையும் வகையில், நிபந்தனைகளை வகுக்கக் கூடாது

    Advertisement

    ஒப்பந்ததாரர் தேர்வை, 100 சதவீதம் 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்

    ஒப்பந்தப்புள்ளியின் வெளிப்படை தன்மையை பாதிக்கும் எந்தவொரு தலையீடு அல்லது நேரடி தொடர்பையும் அனுமதிக்கக் கூடாது

    ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி, அதற்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்

    ஒப்பந்ததாரர்களிடம் போட்டியை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்ட 'பேக்கேஜ் டெண்டர்'களை தவிர்க்க வேண்டும். தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்கள் போட்டியில் பங்கேற்பதற்கான நியாயமான வாய்ப்புகளை வழங்க வேண்டும்

    ஒப்பந்ததாரர் தகுதியிழப்பு அல்லது ஒப்பந்தப்புள்ளி நிராகரிப்பிற்கான காரணங்களை, எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டு குழுக்கள் தெரிவிக்க வேண்டும்.

    அதிரடி மாற்றம்

    என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறைகள் மூலம், டெண்டர் பெறும் நிறுவனங்கள், திட்டத்தை செயல்படுத்த தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறதா? இதற்கு முன்னர் அந்த நிறுவனம் எடுத்த திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து கொடுத்திருக்கிறதா? அதன் டிராக் ரெக்கார்ட் என்ன? என்பது போன்றவை புள்ளிகளாக இணையத்தில் பதிவேற்றப்படும். இந்த புள்ளிகள் அடிப்படையில் மட்டுடே டெண்டர் ஒதுக்கப்படும் என்பதால், எதிர்க்காலத்தில் தகுதி இல்லாத நிறுவனங்கள் டெண்டர் பெறுவது தடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

    English Summary

    It is common practice for projects undertaken by the Public Works Department to be awarded to private entities through a tender process. However, complaints arose that many competent contracting firms were being disadvantaged because projects were being allocated only to companies favored by those in power. In response, the Tamil Nadu government has formulated new regulations to address this issue.