கரண்ட் கட் போதாதுன்னு.. 1 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.30க்கு வாங்கும் நிலை? தமிழகத்தில் என்ன நடக்குது?

  • சென்னை: மின்சாரம் இல்லாமல் ஒரு நாளை நம்மால் நினைச்சுக் கூட பார்க்கவே முடியாது. வீடுகள் முதல் தொழிற்சாலைகள் வரை எல்லாமே மின்சாரத்தை நம்பித்தான் இருக்கின்றன. ஆனால், இப்போது தமிழகத்தில் அந்த மின்சாரத்தை வாங்குவதற்கே ஒரு யூனிட்டுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

    Advertisement

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் தினசரி சராசரி மின் தேவை சுமார் 21,000 மெகாவாட்டாக இருந்துள்ளது.

    Advertisement

    தமிழக மின்சார வாரியம்

    ஆனால், காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் தேவையான அளவு மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் சுமார் 1,500 முதல் 2,000 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதுபோன்ற நிலை தமிழகத்தில் மட்டுமல்ல... பல மாநிலங்களிலும் மின் தேவை அதிகரித்துள்ளதால், வெளிச்சந்தையில் மின்சாரத்துக்கான விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் தமிழக மின் வாரிய அதிகாரிகளுக்கும் தயக்கம் இருந்துள்ளது. அதுக்காக மின்சாரம் தேவைப்படும் நேரத்தில் வேறு வழியும் நமக்கு இல்லையே...

    சென்னை கரண்ட் கட்

    இதன்விளைவாக, இந்த மாதத்தின் 2வது வாரத்திலிருந்து சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் ஒரு மணி நேரம் கரண்ட் கட் செய்யப்பட்டது. இதனால் வீடுகளில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்களும் கடுமையாகவே பாதிக்கப்பட்டன.

    Advertisement

    பற்றாக்குறையை இப்படியே விட்டுவிட முடியாது என்பதால், கடந்த வார இறுதியிலிருந்து மின் வாரியம் கூடுதல் மின்சாரத்தை வாங்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு நிறுவனங்களிடம் இருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும் சுமார் 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.20-க்கும் மேல் செலவாகிறது என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, கேரளா மின் பற்றாக்குறை

    ஆனால், இதில்தான் அடுத்த ஷாக் உள்ளது.. மாலை 6 மணி முதல் இரவு வரை மின்சாரத்துக்கான தேவை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் வாங்கிய மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை விலை கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    கேரளாவிலும் இதேபோல மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு மின் தேவை அதிகரிப்பு, மழைக்குறைவு காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்தது போன்ற காரணங்களால் தினசரி தேவைக்கே டிமாண்டு ஏற்பட்டுள்ளதாம். அதாவது 700 முதல் 900 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்..

    லோடு ஷெடிங்கை தவிர்க்க, அங்குள்ள மின்சார வாரியமும் வெளியிலிருந்து அதிகமாக காசு கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக 300 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.30 வரை கொடுத்து வாங்கும் வாய்ப்பும் பரிசீலிக்கப்பட்டது.

    1 யூனிட் 30 ரூபாய்

    பக்கத்து மாநிலத்தில்தான் இந்த நிலைமையென்றால், இப்போது நம்ம தமிழகத்திலும் ஒரு யூனிட்டுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கொடுத்து மின்சாரம் வாங்கியதாக தகவல் வெளியாகியிருப்பது கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியிலுள்ள மின் வாரியத்துக்கு, இப்படி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது மேலும் சுமையை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    Advertisement

    கடந்த ஆட்சிகளில் அதிக அளவில், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதே மின் வாரியத்தின் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று மின் வாரிய பணியாளர்கள் சொல்கிறார்கள். இப்போது வெளிப்படையான அரசு என்று கூறப்படுவதால், எந்த நிறுவனத்திடமிருந்து எவ்வளவு மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது, ஒரு யூனிட்டுக்கு என்ன விலை கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்த துவங்கியிருக்கிறார்கள்..!!!

    Topics: #tneb

    English Summary

    Electricity at ₹30 Per Unit.. Tamil Nadu Government Faces Power Shortage.. What’s Happening?