கம்மி பட்ஜெட்டில் அரசு வீடு.. சர்ப்ரைஸ் அறிவிப்பை தந்த TNHB! உடனே அப்ளை பண்ணுங்க! மிஸ் பண்ணிடாதீங்க!

  • சென்னை: சென்னை மாவட்டம் - அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எர்ணாவூர், கடலூர் மாவட்டம் குண்டுசாலை, மதுரை மாவட்டத்தில் எல்லீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டம் -திருமழிசை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வல்லன்குமாரவில்லை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை கட்டும் நிலையில், பொதுமக்கள் தங்களின் விருப்ப இடம், குடியிருப்பு வகை மற்றும் தொடர்புடைய பிற தேவைகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நல்வழிகாட்டுதலின்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமாரால், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், சுயநிதி திட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று 2026-2027 ஆம் ஆண்டு கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கை கூட்டத் தொடரின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    Advertisement

    மேற்கண்ட அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை மாவட்டம் - அண்ணா நகர். புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எர்ணாவூர், கடலூர் மாவட்டம் குண்டுசாலை. மதுரை மாவட்டத்தில் எல்லீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டம் -திருமழிசை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வல்லன்குமாரவில்லை ஆகிய இடங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் கட்டப்படும்.

    மேலும், இத்திட்டங்களை திட்டமிடும் முன், பொதுமக்களின் கேட்பினை (Demand Assessment) அறிந்து, அவர்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் அமைப்பதற்காக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://tnhb.tn.gov.in) ஒரு பிரத்யேக இயங்குதளத்தை (Portal) உருவாக்கியுள்ளது. மேற்கண்ட இயங்குதளத்தின் மூலம், பொதுமக்கள் தங்களின் விருப்ப இடம், குடியிருப்பு வகை மற்றும் தொடர்புடைய பிற தேவைகளை பதிவு செய்யலாம்.

    Advertisement

    பெறப்படும் இந்தப் பதிவு பொதுமக்களின் தேவையை மதிப்பீடு செய்வதற்காக மட்டுமே தவிர வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான எந்தவொரு முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது. ஆனால், மேற்படி மதிப்பீட்டுப் பதிவை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளவர்களுக்கு திட்டம் செயல்படுத்தப்படும்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதற்கான தேதி விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக பதிவு செய்த எண்ணிற்கு தெரிவிக்கப்படும்.

    எனவே, மேற்கண்ட பகுதிகளில் குடியிருப்புகள் பெற ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தை (https://tnhb.tn.gov.in) அணுகி, தங்களின் கேட்பினை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    TNHB invites public demand registrations for upcoming self-finance housing projects across Chennai and other Tamil Nadu districts.