கழுத்தை நெரித்த கரண்ட் பில்..கவலை வேண்டாம்! இனி பில் தானாகவே ரத்தாகும்! வயிற்றில் பால்வார்த்த TNPDCL

  • சென்னை: தவெக ஆட்சி அமைந்த பிறகு மின் கட்டணம் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார் எழுந்து வருகிறது. 300 ரூபாய் 500 ரூபாய் வரை கரண்ட் பில் கட்டியவர்கள் தற்போது 5000 6000 என கரண்ட் பில் வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜூன் - ஜூலை - ஆகஸ்ட் கட்டணத்தை விட செப்டம்பர் - அக்டோபர் கட்டணம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் அந்த பில் தானாகவே தடுத்து நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டிஎன்பிடிசிஎல் ( (TNPDCL - Tamil Nadu Power Distribution Corporation Limited) அறிவித்துள்ளது

    Advertisement

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்து வருகிறது. பொது வெளியில் சமூக வலைதளங்களிலும் இது போன்ற பேச்சுக்களை அதிகம் கேட்க முடிகிறது.

    Advertisement

    வழக்கமாக 700 முதல் 900 ரூபாய் வரும் மின் கட்டணம், தற்போது 4000 முதல் 5000 ரூபாய் வரை வருவதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் 4000 முதல் 5000 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வந்த பல வீடுகளில் 10000க்கும் மேல் மின் கட்டணம் அதிகரித்துள்ளது.

    மின்கட்டண உயர்வு

    இதுபோன்ற மின்சார பில் நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பிட்ட வீடு அல்லது குறிப்பிட்ட நகரங்களுடன் இந்த பிரச்சனை நின்று விடவில்லை. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. குறிப்பாக வீடுகள் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் அதிக அளவு மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு இருப்பது நுகர்வோர்களை அதிர்ச்சியை அடைய வைத்துள்ளது.

    Advertisement

    மின் மீட்டர் ரீடிங்

    பொதுவாக வீடுகளில் மின் மீட்டர் ரீடிங் எடுக்கப்படும்போது நேரடியாக பதிவாகியுள்ள பயன்பாடு கணக்கிடப்பட வேண்டும். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தாலோ அல்லது மீட்டரை பார்க்க முடியாமல் இருந்தாலும் முந்தைய பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தோராயமாக யூனிட்டுகள் கணக்கிடப்படுகின்றன. அடுத்த முறை நேரடி ரீடிங் எடுக்கும்போது ஏற்கனவே கணக்கிடப்பட்ட தோராய யூனிட்டுகளும் சேர்ந்து மொத்த பயன்பாடு அதிகமாக காட்டப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    மின் நுகர்வோர்

    இதனால் ஒரு மாதத்தில் பயன்படுத்திய மின்சாரத்திற்கான மின் கட்டணம் மட்டுமின்றி முந்தைய காலகட்டத்தில் சரியாக கணக்கிடப்படாத பயன்பாடும் சேர்த்து ஒரே நேரத்தில் பில் வரலாம் என்கின்றனர். மின்வாரிய அதிகாரிகள். இதுபோன்ற கணக்கிட்டு குளறுபடிகளால் சில வீடுகளுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    தமிழக மின் பகிர்மான கழகம்

    இதற்கு இன்னொரு முக்கிய பிரச்சனையும் சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழக மின் பகிர்மான கழகத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்களில் சுமார் 60% பணியிடங்களும். ஆய்வாளர் பணியிடங்களில் சுமார் 42% பணியிடங்களும் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் அனைத்து வீடுகளுக்கும் சரியான நேரத்தில் ரீடிங் இருப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தோராய கணக்கீடு மூலம் பலருக்கு அதிக பில் வந்திருக்கலாம் என்கின்றனர்.

    டிஎன்பிடிசிஎல்

    இந்த நிலையில் தான் அதிக கரண்ட் பில் வந்ததாக புகார் அளித்த நுகர்வோர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மின்கட்டணத்தில் அதிக மாறுபாடு இருந்தால் அந்த ரசீது நிறுத்தி வைக்கப்படும் என டிஎன்பிடிசிஎல் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில் ஜூலை 2026 அல்லது ஆகஸ்ட் 2026-ல் 500 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்திய வீட்டு நுகர்வோர்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும். ஜூலை ஆகஸ்ட் கட்டணத்தை விட செப்டம்பர் அக்டோபர் கட்டணம் 20% அதிகமாக இருந்தால் அந்த பில் தானாகவே தடுத்து நிறுத்தப்படும் என கூறியுள்ளது.

    Advertisement

    மறு சரிபார்ப்பு

    அவ்வாறு நிறுத்தப்படும் சேவைகள் தனிப்பட்டியலில் வைக்கப்பட்டு மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் பில் வந்தால் அவற்றை மறு ஆய்வு செய்ய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். 1000 ரூபாய் வரை வந்தால் கூடுதல் ஐஏ அல்லது ஆர்எஸ், 1001 முதல் 2000 ரூபாய் வந்தால் வருவாய் பிரிவு ஏஎஸ், 2001 முதல் 5000 ரூபாய் வரைவில் வந்தால் ஏடிஓ, 5001 முதல் 10000 வரை பில் வந்தால் வருவாய் பிரிவி ஏஏஓ, 10000 ரூபாய்க்கு மேல் பில் வந்தால் உபகோட்ட ஏஇஇ ஆகியோர் ஆய்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    TNPDCL will automatically hold electricity bills that rise over 20% compared with previous billing periods for eligible high-use households.