அடித்தது ஜாக்பாட்.. தமிழ்நாடு மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! புதிய உத்தரவு

  • சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கான மாத சம்பளம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் நிலவும் ஊழியர்களின் தட்டுப்பாட்டை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் மின்வாரியத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளனர். மின்வாரியத்தில் மொத்த ஊழியர்களின் தேவை 1,40,635 ஆக இருக்கிறது. ஆனால் தற்போது பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 74,174 மட்டும் தான்.

    Advertisement

    இதனால் 65,921 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் தான் மின்சாரம் தடைப்படுவதை சரிசெய்வது, மாதாந்திர பராமரிப்பு பணி உள்ளிட்டவை தாமதமாகி வருகின்றன. இதனை சமீபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உறுதி செய்திருந்தார்.

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களை குறைந்த சம்பளத்தில் ஆங்காங்கே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கும் பொருந்தும். தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் இன்ஜினியர்கள், போர்மென் மற்றும் லைன் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பணிகளில் ஓய்வு பெற்றவர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் என்பது மின் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    Advertisement

    அதுமட்டுமின்றி ஒப்பந்த பணியாளர்களும் உள்ளனர். 110KV துணை மின்நிலையத்தில ஓய்வு பெற்றவர் பணியாற்றும்போது நாள் ஒன்றுக்கு தற்போது ரூ.750 சம்பளமாக வழ்ஙகப்படடு வருகிறது. அதேவேளையில் 33/11kv துணை மின்நிலையத்தில் பணியாற்றும் ஓய்வு பெற்றவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 சம்பளமாக கிடைக்கிறது.

    இந்த சம்பளம் ஓய்வுபெற்றவர்கள் மத்தியில் மிகவும் குறைவு என்ற பேச்சு உள்ளது. இதனால் பலரும் வேலைக்கு ஆர்வமாக வருவது கிடையது. இதனால் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு பிரச்சனை வருகிறது. இந்நிலையில் தான் ஓய்வு பெற்றவர்களை பணிக்கு அழைக்கும் வகையில் தற்போது சம்பளம் என்பது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வு பெற்றவர்களுக்கான சம்பளம் மாதம் ரூ.30 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் ஒப்பந்த ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.766ல் இருந்து தற்போது ரூ.965 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பிஎஃப், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை சேர்க்கும்போது அதன் சம்பளம் ரூ.1,324 ஆக உயரும். இதன்மூலம் பணிக்கான ஆள்பற்றாக்குறையை போக்க முடியும் என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இருப்பினும் கூட இந்த பணிகளுக்கு இளைஞர்களை நியமனம் செய்தால் அவர்கள் துடிப்புடன் வேலையாற்றுவார்கள். ஆனால் ஓய்வு பெற்றவர்களை நியமனம் செய்யும்போது அனுபவம் இருந்தாலும் கூட பணியில் சில இடங்களில் தொய்வு இருக்கலாம். இளைஞர்களை பயன்படுத்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தவறிவிட்டது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    TNPDCL Hikes Salary: The monthly remuneration for retired employees and contract workers at the Tamil Nadu Electricity Distribution Corporation has been significantly increased. This measure has been taken to alleviate the staff shortage within the corporation.