TNPSC Group 1 Exam: இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு.. 46 பதவிகளுக்கு 2.23 லட்சம் பேர் போட்டி!

  • சென்னை: துணை ஆட்சியர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெறுகிறது. 46 காலி பணியிடங்களுக்கு நடக்கும் தேர்வை 2.23 லட்சம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் 128 பள்ளிகளில் தேர்வு நடக்கிறது.

    Advertisement

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 12 துணை ஆட்சியர், 2 வணிக வரி உதவி ஆணையர், 3 கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், 8 தமிழ்நாடு பதிவு பணி மாவட்ட பதிவாளர், ஒரு தொழிலாளர் உதவி ஆணையர் என 26 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி வெளியிட்டது. அதைத்தொடர்ந்து குரூப் 1 காலி பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும் டிஎன்பிஎஸ்சி அதிகரித்தது. இதன் மூலம் குரூப் 1 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.

    Advertisement

    குரூப் 1முதல்நிலைத் தேர்வு முதலில் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் நிர்வாகக் காரணங்களால் தேர்வு தேதி மாற்றப்பட்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

    அதன்படி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுவை 2 லட்சத்து 23 ஆயிரத்து 440 பேர் எழுதுகின்றனர். இதில் ஆண்கள் 95,984, பெண்கள் 1,27,441 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேர்.
    இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 754 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தேர்வுக் கூடத்திற்கு ஒருவர் வீதம் 754 தலைமைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Advertisement

    சென்னையில் 128 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை 37,659 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் ஆண்கள் 19508 பேர், பெண்கள் 18148 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேர் ஆவர்.

    இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியுள்ள குரூப் 1 முதல்நிலைத் தேர்வு பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவது வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    English Summary

    TNPSC Group 1 preliminary written examination for posts such as Deputy Collector and Assistant Commissioner of Commercial Taxes is being held today. A total of 2.23 lakh candidates are appearing for the exam to fill 46 vacancies. The examination is being conducted across 128 schools in Chennai.