சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இதுவரை சுமார் 10 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். இத்தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் கிராம நிா்வாக அலுவலா், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வருவாய் உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி அன்று வெளியிட்டது.
இதற்கான இணையவழி விண்ணப்பதிவு அன்றைய தினத்தில் இருந்தே தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும் முதுகலை பட்டதாரிகளும் பொறியியல் படித்தவா்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனா். இத்தோ்வுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 9.80 லட்சம் போ் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ. 5-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசத்தை நவ. 8 ஆம் தேதி வரை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி அண்மையில் உத்தரவிட்டது. இந்த அவகாசம் இன்று நள்ளிரவு 11.59 மணியுடன் நிறைவடையும் நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குரூப் 4 தேர்வானது 2027, ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு 5 ஆண்டு காலம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற முகவரியில் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.