TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 2-வில் திணறடித்த கேள்விகள்! குரூப் 4க்கு எப்படி தயாராகணும்? நிபுணர்கள் விளக்கம்

  • சென்னை: நேற்று முன் தினம் நடந்த குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வில், தேர்வர்களை திணறடிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வரும் ஜனவரியில் நடக்க இருக்கும், குரூப் 4 தேர்விலும் 50 சதவீதம் பள்ளி புத்தகங்கள் என்றால் 50 சதவீதம் அவுட் சோர்சில் இருந்து கேட்டால் கூட ஆச்சர்யம் இல்லை. எனவே, தேர்வர்கள் இதனை மனதில் வைத்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என நிபுரணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 4.90 லட்சம் எழுதினர். டிகிரி கல்வித்தகுதி கொண்ட குரூப் 2, 2 ஏ தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

    Advertisement

    ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் இருந்ததாக..

    இதில் முதல் நிலை தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. 200 கேள்விகள் இடம் பெற்று இருக்கும். குரூப் 4- க்கு என்ன பேட்டர்னில் கேள்விகள் இடம் பெற்று இருக்குமோ அதே பேட்டர்னில்தான் குரூப் 2, 2 ஏ முதல் நிலை தேர்வு அமைந்து இருக்கும். டிகிரி கல்வி தகுதி என்பதால் அதற்கு ஏற்ப வினாக்கள் இடம் பெற்று இருக்கும். நடந்து முடிந்த குரூப் 2, 2 ஏ தேர்வுகளில் முன்பை விட சற்று கடினமாகவும் ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் இருப்பதாகவும் தேர்வர்களும் கல்வியாளர்களும் கூறினர்.

    Advertisement
    குரூப் 2, 2ஏ தேர்வு எழுதியாச்சா?.. ரிசல்ட் எப்போ தெரியுமா?..2 மாதத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்

    குறிப்பாக பகளாபாத் என்றால் என்ன? உள்ளிட்ட கேள்விகள் யூகிக்க முடியாத அளவுக்கு இருந்ததாக கூறினர். எனவே, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் தேர்வர்கள் இடையே அதிகரித்துள்ளது. இது குறித்து பயிற்சி மையங்களை சேர்ந்தவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:-

    அவுட் சோர்சில் இருந்து அதிக கேள்விகள்

    டிஎன்பிஎஸ்சி தற்போது வினாக்கள் எடுக்கும் முறையை முன்பை விட அதிகம் மேம்படுத்திவிட்டதாக கூறினர். அதாவது, வினாக்கள் நேரடியாக இருப்பதற்கு பதிலாக நன்கு ஆழமாக சிந்தித்து புரிந்து கொண்டு விடையளிக்கும் விதமாகவே கேள்விகள் அதிகம் இருப்பதாக கூறினர். அதேபோல, குரூப் 4 தேர்வு என்றால் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்துதான் பெரும்பாலும் கேள்விகள் இருக்கும் என கருத்து நிலவி வருகிறது.

    Advertisement
    டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட மிக கடினமான கேள்வி.. பதில் என்ன தெரியுமா?

    ஆனால் கடந்த முறையே அவுட் சோர்சில் இருந்து அதிக கேள்விகள் இடம் பெற்று இருந்தன. எனவே, வரும் குரூப் 4 தேர்விலும் 50 சதவீதம் பள்ளி புத்தகங்கள் என்றால் 50 சதவீதம் அவுட் சோர்சில் கேட்டால் கூட ஆச்சர்யம் இல்லை. எனவே, தேர்வர்கள் இதனை மனதில் வைத்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை பொறுத்தவரை டிஎன்பிஎஸ்சி அதற்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    தேர்வர்கள் நோட் செய்ய வேண்டிய விஷயம்

    டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இந்த பாடத்திட்டங்களை தேர்வர்கள் பார்க்கலாம். இந்த பாடத்திட்டத்தின்படியே வினாக்கள் இடம் பெறும் என்றும், பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படும் என்று சொல்ல முடியாது என்பதே, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கடந்த காலங்களில் விளக்கம் அளித்து இருந்ததும் தேர்வர்கள் நோட் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

    English Summary

    TNPSC: In the Group 2 and 2A preliminary examinations held the day before yesterday, the questions posed were challenging enough to leave candidates struggling. Given this, experts suggest that for the upcoming Group 4 examination in December, it would not be surprising if 50 percent of the questions are drawn from school textbooks, while the other 50 percent come from external sources. Therefore, candidates are advised to keep this in mind as they prepare for the exam.