இன்னைக்கு 'ட்ரை டே'! மது பிரியர்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்! முக்கிய அறிவிப்பு!

  • சென்னை: நாடு முழுவதும் இன்று மிலாது நபி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 'ட்ரை டே' கடைபிடிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும்.

    Advertisement

    மதுக்கடைகள் மட்டுமல்லாது.. டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடம் (பார்), தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்கள், FL1 முதல் FL11 உரிமம் பெற்றவை மற்றும் கிளப்புகள் அனைத்தும் இன்று இயங்காது.

    Advertisement

    இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டத்தில் இன்று மிலாது நபி தினத்தை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் அனைத்தும் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர். உத்தரவை மீறி மதுவை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

    நாடு முழுவதும் இன்று மிலாது நபி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினம்தான் மிலாது நபியாக கொண்டாடப்படுகிறது. இன்று அதிகாலையில் டெல்லியின் முக்கிய மசூதிகளில் இஸ்லாமியர்கள் பரவலாக தொழுகை நடத்தினர். ஒருவரை ஒருவர் தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர்.

    English Summary

    Dry Day: Milad-un-Nabi is being celebrated across the country today. Amidst this, an announcement has been made that a 'dry day' is being observed in Tamil Nadu today; consequently, liquor shops across the state will remain closed.