தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து.. அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

  • சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். தீபாவளி பயண நாட்களான நவம்பர் 6 முதல் நவம்பர் 10 வரை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. நாளை (புதன்) முதலே மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். எனினும் வியாழன் மற்றும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தான் மக்கள் அதிகம் பேர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வார்கள். குறிப்பாக வெள்ளிகிழமை மாலை மற்றும் சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் செல்வார்கள்.

    Advertisement

    திருச்சி மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள் ஒரே நேரத்தில் பல ஆயிரம் வாகனங்கள் பரனூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், சமயபுரம் சுங்கச்சாவடிகளில் கடப்பார்கள். அதேபோல் சேலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களும் பரனூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர் வழியாக கடப்பார்கள். இதில் திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய சுங்கச்சாவடிகளில் கடுமையான நெரிசல் ஏற்படும். இந்த சூழலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

    திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்கமானது.

    Advertisement

    இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுவதால், நவம்பர் 6, 7, 8, 9, 10 ஆகிய நாட்களில் நெடுஞ்சாலைகளில் வழக்கத்தை விட பல மடங்கு வாகன நெரிசல் ஏற்படும். இந்த நெரிசலுக்கு முக்கிய காரணம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைதான். ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் இது தொடர்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எரிபொருள் விரயமும், காற்று மாசும் அதிகரிக்கிறது.

    பரனூர், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிகளில் இனி இவர்களுக்கு கட்டணமில்லை.. மத்திய அரசு திட்டம்

    எனவே, மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    Advertisement

    1. தீபாவளி பயண நாட்களான நவம்பர் 6 முதல் நவம்பர் 10 வரை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

    2. தீபாவளி மற்றும்பொங்கல் ஆகிய பண்டிகைகளையொட்டிக் கட்டணம் ரத்து செய்யப்படும் நாட்களில் சுங்கச்சாவடித் தடுப்புகளை முழுமையாகத் திறந்து வைத்து, தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    3. பண்டிகை கால நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். ,அத்துடன், அவசர மருத்துவ உதவி மையங்களை அமைத்திடவேண்டும். மேலும், கூடுதல் ஆம்புலன்சுகளையும் நெடுஞ்சாலைகளில் ஏற்பாடு செய்யவேண்டும்.

    Advertisement

    சுங்கக் கட்டணத்தை விட, மக்களின் நேரமும், பாதுகாப்பும், நிம்மதியான பயணமுமே முக்கியம் என்கிற வகையில் தமிழ்நாடு அரசு தீபாவளி பயண நாட்களில் சுங்கக் கட்டணத்து ரத்து செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    Thirumavalavan has urged that the collection of toll fees be waived at all toll plazas on national and state highways—on routes leading out of Chennai to other districts—during the Diwali travel period from November 6 to November 10.