சென்னையில் இரு சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

  • சென்னை: சென்னையில் இரு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கார், ஜீப்பில் ஒரு முறை பயணம் செய்வதற்கான சுங்கக் கட்டணம் ரூ.55 ஆக அதிகரித்துள்ளது. 4 மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளான வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் அதிகம் செல்லக் கூடிய சுங்கச்சாவடிகளாக இருந்து வருகின்றனர்.

    Advertisement

    சுங்க கட்டணம் உயர்வு

    இந்த நிலையில் வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ரூ.5 முதல் ரூ.15 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் வருடாந்தோறும் உயர்த்தப்படும் சுங்கக் கட்டண உயர்வும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கடந்த 4 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இன்று சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது.

    சென்னை துறைமுகம் நோக்கி அதிகளவில் கனரக வாகனங்கள் வரும் சுங்கச்சாவடியாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி கார்களும் அதிகளவில் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்கின்றதால் இக்கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினையே சமாளிக்க முடியாமல் லாரி உரிமையாளர்கள் திணறி வரும் நிலையில் இது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    Advertisement

    கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது?

    கார் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு தற்போது ரூ.55 ஆக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 80 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த வாகங்களுக்கு தற்போது ரூ. 85 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதே போன்று இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை செல்வதற்கு ரூ.80 ரூபாயும், ஒரே நாளில் திரும்பி வந்தால் ரூ.135 ஆகவும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, 10 ரூபாய் அதிகரித்து ரூ.135 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களிலும் இதே போன்று ரூ.15 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

    காலாவாதியான சுங்கச்சாவடி இது, இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என கூறி என ஏற்கனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். சர்வீஸ் சாலையே இல்லை என்று கூறியும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த கட்டண உயர்வு அவர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்பப் பெறும் படியும் வலியுறுத்தி வருகின்றனர்.

    English Summary

    Toll rates hike: Motorists were shocked by the hike in toll charges at two toll plazas in Chennai. The increased rates came into effect at the Vanagaram and Surapattu toll plazas at midnight. The toll fee for a single trip by car or jeep has risen to ₹55. This marks the second time the toll charges have been raised in four months.