விடிந்ததும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி.. சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிரடி உயர்வு.. எவ்வளவு கூடியது?

  • சென்னை: தமிழகம் முழுவதும் 25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டியில் கார் கட்டணம் ரூ.105 ல் இருந்து ரூ.110- ஆக உயர்ந்துள்ளது. வாகன வகைகளுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்க கட்டணம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று அதிகாலை முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.

    Advertisement

    தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் அரசு மற்றும் தனியார் கூட்டுத்திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால், சுங்கச்சாவடிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.

    Advertisement

    சுங்கக் கட்டணம் உயர்வு

    அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் தன்மைக்கேற்ப சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்க கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் மறு பரிசீலனை செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு வருகிறது. 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் கடைசியாக ஜூன் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் சுங்க கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. ஜூன் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதியான இன்று முதல் சுங்க கட்டணம் மீண்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வாகன வகைகளுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    பொதுமக்கள் அதிர்ச்சி

    குறிப்பாக விக்கிரவாண்டியில் கார் கட்டணம் ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி, சமயபுரம், மதுரை, செங்குறிச்சி, வாலஜாபாத் என 40 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் உயர்ந்து இருப்பதால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ஈரான் போரால் எரிபொருள் விலை உயர்ந்தது.

    இதனால், வாகன தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் நஷ்டத்தை சம்பாதித்தனர். தற்போது சுங்க கட்டண உயர்வும் தங்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும் என்று லாரி உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் உயர்ந்தால் அதன் தாக்கத்தால் வாடகை உயர்த்தப்படும். கடைசியாக மக்கள் தலையில்தான் இந்த விலை உயர்வு தாக்கத்தை ஏற்படும் என்பதால், பொதுமக்களும் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    English Summary

    Toll charges have been sharply increased today at 25 toll plazas across Tamil Nadu. At Vikravandi, the fee for cars has risen from ₹105 to ₹110. Motorists are shocked by the hike, which ranges from ₹5 to ₹20 depending on the vehicle type. The new rates came into effect early this morning.