சென்னை: வடசென்னையின் மிக முக்கியமான மற்றும் மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதிகளில் ஒன்றான தண்டையார்பேட்டை பகுதி மக்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கை இறுதியாக நிறைவேறியுள்ளது.
எண்ணூர் ஹை ரோடு பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அருகே, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ₹2.4 கோடி மதிப்பீட்டில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது.
தண்டையார்பேட்டை வார்டு 38-க்கு உட்பட்ட எண்ணூர் ஹை ரோடு பகுதியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான காலி நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. முறையான நிழற்குடை, கழிப்பறை, குடிநீர் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடுமையான வெயில் மற்றும் கனமழை காலங்களில் பயணிகள் மரத்தடியிலேயே தஞ்சமடையும் அவல நிலை நீடித்தது. பயணிகள் மட்டுமின்றி, பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கழிப்பறை வசதியின்றி சாலையோர புதர்களை நாடும் பரிதாப சூழல் நிலவியது. மேலும், ரயில்வே தண்டவாளம் அருகே பேருந்துகளைத் திருப்புவதில் நிலவிய சிரமங்களால், மாலை 6 மணிக்கு மேல் சாலையோரத்திலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. நீண்டகாலமாக நீடித்த இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹1.8 கோடி செலவிடப்பட்டு, ரயில்வே துறைக்குச் சொந்தமான அந்த இடம் 32 ஆண்டுகால குத்தகைக்கு பெறப்பட்டது. தொடர்ந்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் ₹2.4 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையம் 16,000 சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது: பயணிகள் அமர்ந்து செல்ல வசதியான இருக்கைகளுடன் கூடிய விசாலமான காத்திருப்பு கூடம் தற்போது இந்த பகுதியிலிருந்து தீவுத்திடல் வரையிலான 44 Cut சேவை மற்றும் C1 பேருந்து ஆகிய இரண்டு வழித்தடங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை நம்பியே உயர் நீதிமன்றம், சென்னை கடற்கரை ரயில் நிலையம் மற்றும் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையங்களுக்கு மக்கள் பயணித்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் நெடுஞ்செழியன் நகர், நேதாஜி நகர், ராஜசேகரன் நகர், கொருக்குப்பேட்டை மற்றும் மணலி உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40,000-க்கும் அதிகமான பொதுமக்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய பேருந்து நிலைய பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தண்டையார்பேட்டையிலிருந்து நகரின் முக்கியப் பகுதிகளுக்கு முன்பு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தடங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. குறிப்பாக: 159D (கோயம்பேடு) ஆகிய முக்கிய வழித்தடங்களை உடனடியாக மீண்டும் இயக்க வேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் (MTC) மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களின் பயண நேரம் பெருமளவு குறையும். அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டதாகவும், தமிழக அரசு மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் திறப்பு விழா தேதிக்காகக் காத்திருப்பதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 ஆண்டுக்கால காத்திருப்புக்குப் பிறகு வடசென்னையில் வர உள்ள இந்த நவீன பேருந்து நிலையம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.மரத்தடியில் தஞ்சமடைந்த 40 ஆண்டுக்கால வரலாறு
ரூ.2.4 கோடியில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு
ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்தனி நவீன கழிப்பறை வசதிகள்
பாலூட்டும் தாய்மார்களுக்கான பிரத்யேக அறை
போக்குவரத்து ஊழியர்களுக்கான டைம் கீப்பிங் அறை
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேர சிசிடிவி (கண்காணிப்பு கேமராக்கள்40,000 மக்கள் பயன்பெறும் திட்டம்
பழைய வழித்தடங்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை
1F (திருவான்மியூர்)
4D (அடையாறு)
170E (தாம்பரம்)
44C (அண்ணா சதுக்கம்)
15A (வடபழனி)