டோட்டல் சென்னை இனி ஒரே இடத்தில் வியூ.. ரூ.98.25 கோடியில் மாநகராட்சியின் மெகா திட்டம்.. செம தீர்வு

  • சென்னை: சென்னை மாநகராட்சி முக்கியமான நடவடிக்கை ஒன்றை கையிலெடுத்துள்ளது.. அது என்ன தெரியுமா? சென்னையில் மழை பெய்தாலே எந்த பகுதியில் தண்ணீர் தேங்குகிறது, எந்த சாலையிலும் டிராபிக்குகள் உள்ளன.. குப்பைகளும் பல இடங்களில் அகற்றப்படவில்லை என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு துறைகள் மூலம் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்போது இந்த பணிகளை இன்னும் வேகமாக ஒருங்கிணைத்து கண்காணிக்க புதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது.

    Advertisement

    சென்னை மாநகராட்சியின் முக்கிய பணிகளில் மழைநீர் வடிகால் பராமரிப்பு, சாலைகள் பராமரிப்பு, குப்பை அகற்றுதல், பொது சுகாதாரம் உள்ளிட்டவை அடங்கும். குறிப்பாக மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படுகின்றன... தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்சனையை குறைக்க வடிகால் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Advertisement

    சென்னை மாநகராட்சியின் முக்கிய பணிகள்

    அதேபோல், நகரம் முழுவதும் குப்பைகளை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கே சென்று குப்பை சேகரிப்பது, சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறை கவனித்து வருகிறது.

    மழை மற்றும் பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்கள், குப்பைகள், மழைநீர் வடிகால்களில் ஏற்படும் அடைப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

    மொத்த பணிகளும் ஒரே இடத்தில் கண்காணிப்பு

    இப்படி நகரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரே இடத்திலிருந்து கண்காணித்து ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுக்காகத்தான் இப்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை முழுமையாக மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    இதற்காகவே ரூ.98.25 கோடி செலவில் விரிவான மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டளை மையம் மறுசீரமைக்கப்பட்டு, சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை "லைவ்"வாக கண்காணிக்கும் வகையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    மழைநீர், கண்காணிப்பு அமைப்புகள்

    இதன் மூலம் நகரம் முழுவதுமுள்ள பல்வேறு கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் மாநகராட்சி சேவைகள் தொடர்பான தகவல்களை ஒரே மையத்தில் இருந்து கண்காணிக்க முடியும்... குறிப்பாக மழைக்காலங்களில் எந்த இடத்தில் மழைநீர் தேங்குகிறது, எந்த பகுதியில் வெள்ள அபாயம் உள்ளது என்பதை விரைவாக கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    Advertisement

    அவசர காலங்களில் மாநகராட்சியின் பல்வேறு துறைகளுடன் மட்டுமல்லாமல் போலீஸ் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலும் இந்த மையம் பயன்படுத்தப்படும்...ஒரு பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததுமே, உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டு சென்று நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடியும்.

    நகர்ப்புற பிரச்சனைகளுக்கு தீர்வு

    அதுமட்டுமல்ல, சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி, அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் பிரச்சனைகள் ஏற்பட்டதுமே நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் நகர்ப்புற பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டுபிடித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    நாளுக்கு நாள் சென்னை வளர்ந்து வரும் நிலையில், நகரத்தின் அன்றாட சேவைகளை கண்காணிப்பதற்கும், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் நேரங்களில் விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த மேம்படுத்தப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் முக்கியத்துவம் பெற உள்ளது...!!!

    English Summary

    Total Chennai in One View.. Rs 98.25 Crore Mega Plan to Monitor and Solve City Problems