500 கோடி போட்டு குப்பை கதையா?”.. டாக்ஸிக் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அந்தணன் சொன்ன காரணம்

  • சென்னை: 500 கோடியில் எடுத்த டாக்ஸிக் படம் நெகட்டிவ் கமெண்ட்களை சந்தித்து வருகிறது.. கேஜிஎஃப் படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் தனக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருப்பதாகவும், தான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என்ற மிதமிஞ்சிய திமிரின் காரணமாகவே இந்த சறுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சீக்கிரமான வெற்றி கொடுத்த திமிர் காரணமாகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தாலும், காலம் இவர்களுக்கு ஒரு பெரிய படிப்பினையை கற்றுக்கொடுத்துள்ளது" என்று சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Media circle சேனலுக்கு பேட்டி தந்துள்ள அந்தணன், "டாக்ஸிக் படம் நேற்று வெளியான நிலையில், படம் மிகப்பெரிய அளவில் நெகட்டிவ்- விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. எவ்வளவு கன்றாவியாக படமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு சென்றால் கூட, அதைவிடவும் பன்மடங்கு கன்றாவியாக இந்தப் படம் இருப்பதாக மக்கள் சோஷியல் மிடியாவில் விவாதித்து வருகின்றனர்.

    Advertisement

    டாக்ஸிக் படம்

    பிரம்மாண்டத்தைக் காட்டிவிட்டால் மட்டும் மக்கள் அனைத்தையும் ரசித்துவிடுவார்கள் என்ற தவறான எண்ணத்தில் இதுபோன்ற படங்கள் இயக்கப்படுகின்றன. ஒன்றுக்கொன்று கொஞ்சமும் துளியும் தொடர்பில்லாத சீன்களும், கத்தி, ரத்தம், வெட்டு, குத்து போன்ற சண்டைக்காட்சிகளும் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளன.

    3.15 மணி நேரம் ஓடுவதால், தியேட்டருக்கு போகும் மக்கள், கடுப்பாகிவிடுகிறார்கள்.. சாதாரண நல்ல படமே 3 மணி நேரம் ஓடும்போது, இதுபோன்ற குப்பையான கதையை இவ்வளவு நேரம் யார் உட்கார்ந்து பார்ப்பார்கள்? முக்கால் மணி நேரக் காட்சிகளை வெட்டிவிட்டு இரண்டரை மணி நேரமாக கிரிஸ்பாக கொடுத்திருந்தால் ஓரளவு தப்பியிருக்கலாம். படம் பார்த்த பலரும் கத்தி, கதறி, கொந்தளிப்புடன் தியேட்டரை விட்டு வெளியே ஓடி வருகிறார்கள்.

    Advertisement

    குப்பை கதையை யார் பார்ப்பார்கள்

    படத்தில் கதை இருக்கிறதா என்பதே பெரும் கேள்விகுறி.. நல்ல கதையை தேர்ந்தெடுப்பதை விட, யார் யாருடைய காம்பினேஷன் சேர்ந்தால் எவ்வளவு பிசினஸ் நடக்கும், ஓடிடி மற்றும் மற்றும் மற்ற மார்க்கெட்டில் எவ்வளவு லாபம் வரும் என்று கணக்குப் போட்டு மட்டுமே இப்போது படங்கள் தொடங்கப்படுகின்றன.

    தயாரிப்பாளர் பணம் மட்டுமே போடுவார் என்ற நிலை மாறி, இன்று ஹீரோக்களே கதையைத் தேர்வு செய்வது மற்றும் டெக்னீஷியன்களைத் தேர்ந்தெடுப்பது எனப் பல விஷயங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.. ஆனால், டைரக்டரை தவிர இந்த படத்தில் பணியாற்றிய பைட்டு மாஸ்டர்கள், ஒளிப்பதிவாளர், லொகேஷன் மற்றும் காஸ்டியூம் உள்ளிட்ட அனைத்து டெக்னீஷியன்களும் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளனர்.

    Advertisement

    500 கோடி செலவு செய்தும்..

    அடர்ந்த தாடியுடன் படம் முழுக்க சுட்டுக் கொண்டும் கத்திக் கொண்டும் மட்டுமே ஹீரோ வருவதால், அவரது நடிப்பிற்குத் பெரிய அளவில் வேலை இல்லை. 500 கோடி வரை செலவு செய்து, மூன்றரை வருடங்களுக்கு மேல் எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய டிசாஸ்டராக மாறியுள்ளது.

    கேஜிஎஃப் படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் தனக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருப்பதாகவும், தான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என்ற மிதமிஞ்சிய திமிரின் காரணமாகவே இந்த சறுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சீக்கிரமான வெற்றி கொடுத்த திமிர் காரணமாகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தாலும், காலம் இவர்களுக்கு ஒரு பெரிய படிப்பினையை கற்றுக்கொடுத்துள்ளது.

    Advertisement

    நயன்தாரா இப்படியா

    நயன்தாரா இந்த படத்தில் நாயகனுக்கு அக்காவாக நடித்துள்ளார். படத்தின் இருட்டான சூழலில் அரை வெளிச்சத்தில் வந்து செல்லும் அவரது கேரக்டர், ஆரம்பத்திலேயே 10 பேரை சுட்டுத் தள்ளும் காட்சியுடன் இடம்பெற்றுள்ளது. ஒரு பெண் இயக்குநர் பெண்களைக் கண்ணியமானவர்களாக காட்டாமல், வில்லிகளை போலவும், சந்தர்ப்பவாதிகளாகவும், வெறும் போகப் பொருட்களாகவும் காட்டியுள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    இதே படத்தை ஒரு ஆண் டைரக்டர் எடுத்திருந்தால் மீடியாக்கள் கடுமையாக விமர்சித்திருக்கும். ஏற்கனவே ஜனநாயகன் படம் லீக் ஆனதால் பெரிய இழப்பை சந்தித்த தயாரிப்பாளருக்கு, டாக்சிக் படத்தின் நஷ்டமும் சேர்ந்து மனரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் அடல்ட் கண்டென்ட் மற்றும் மோசமான விமர்சனங்களால் ஓடிடி நிறுவனங்களும் வாங்குவதை தயங்குகின்றன.

    Advertisement

    நெகட்டிவ் கமெண்ட்களை தடுக்க கோர்ட்டில் கேஸ் போட்டாலும்,தியேட்டருக்கு பணம் கொடுத்துப் படம் பார்க்கும் மக்களின் குமுறல்களை சோஷியல் மீடியாவில் யாராலும் தடுக்க முடியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Toxic Movie Negative Reviews.. Ananthanan Explains Why the ₹500 Crore Film Is Facing Criticism