TR Baalu: காலையிலேயே இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை.. திமுக எம்பி டிஆர் பாலு தொடர்புடைய மதுபான ஆலையில் சோதனை

  • திருவாரூர்: திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு தொடர்புடைய மதுபான ஆலைகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூரில் உள்ள கோல்டன் வாட்ஸ் என்ற அந்த மதுபான ஆலையில் காலை 7 மணிக்கே 10-க்கு மேற்பட்ட போலீஸ் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில், முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கியதா? என்ற விவரம் வெளியாகவில்லை.

    Advertisement

    தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கர்ணாவூர் பகுதியில் அமைந்துள்ள மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த மதுபான ஆலை முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான டிஆர் பாலுவின் உறவினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

    Advertisement

    கோல்டன் வாட்ஸ் என்ற அந்த மதுபான ஆலையில் சல்லடை போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில் 10 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை காலை 7 மணிக்கு தொடங்கியது.

    தற்போது வரை தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில், முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கியதா? என்ற விவரம் வெளியாகவில்லை. சோதனை முடிவுகளுக்கு பிறகே இது குறித்த முழு விவரம் தெரிய வரும். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையை அடுத்து பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    TR Baalu: Police from the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) are conducting raids on liquor manufacturing units linked to DMK MP TR Baalu. More than ten police teams have been searching the 'Golden Vats' distillery in Tiruvarur since 7:00 AM. While the search is currently ongoing, no details have emerged yet regarding the recovery of any key documents.