மத்திய கைலாஷ் - மெட்ராஸ் ஐஐடி சாலையில் போக்குவரத்து மாற்றம்.. சென்னை வாகன ஓட்டிகள் அறிய வேண்டியவை

  • சென்னை: ஓஎம்ஆர் சாலை சந்திப்பான மத்திய கைலாஷ் முதல் மெட்ராஸ் ஐஐடி வரையிலான சர்தார் படேல் சாலை, அகலமான பாதைகள் மற்றும் மேம்பாலம் இருந்தும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக இருந்தது. இங்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11,000 வாகனங்கள் கடப்பதாக கூறப்படும் நிலையில், அப்படி கடக்கும் வாகனங்கள் அடிக்கடி மாற்றப்படும் போக்குவரத்து விதிகள், மற்றும் கடைசி நேரத்தில் லேன் மாற்றி செல்வதால் நெரிசல் தொடர்வதாக அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.இந்த சூழலில் போக்குவரத்து மாற்றத்தை அறிவித்த சென்னை போக்குவரத்து போலீசார் அங்கு அறிவித்துள்ளனர்.

    Advertisement

    சென்னையில் மத்திய கைலாஷிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் ஐஐடி மேம்பாலம் அருகே பெரும் சிரமத்தை எதிர்கொள்வது பெரும் சிக்கலாகவே இருந்து வந்தது. எவ்வளவு தான் பாதை அகலமாக இருந்தாலும் வாகன நெரிசல் மோசமாகவே இருக்க சரியான போக்குவரத்து மேலாண்மை இல்லை என்பதே வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. இதனால் அங்கு 1.5 கி.மீ இடைப்பட்ட பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தார்கள். குறிப்பாக கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள், திடீரென ஐஐடி மேம்பாலத்தை அடைவதற்காக இடதுபறத்தில் இருந்து வலதுபுறத்திற்கு மாற முயலும்போது கடுமையான நெரிசல் ஏற்படுவதுதான் சிக்கலுக்கு காரணமாக இருந்து வந்தது.

    Advertisement

    ஏனெனில் மத்திய கைலாஷிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் ஐஐடி மேம்பாலம் அருகே கடைசி நேரத்தில் லேன் மாற்றி செல்வதால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது, இந்த மேம்பாலம் சில நேரங்களில் ஒருவழிப் பாதையாகவும், சில நேரங்களில் இருவழிப் பாதையாகவும் இயக்கப்படுவதும் குழப்பங்களுக்கு காரணமாக இருந்து வந்தது.

    குறிப்பாக ஐஐடி சந்திப்பில் கோட்டூர்புரம் நோக்கி வலதுபுறம் திரும்ப காத்திருக்கும் வாகனங்களின் வரிசை, கிண்டி நோக்கி நேராகச் செல்லும் பிரதான சாலையையும் மறித்து நிற்பது தொடர்கதையாக இருந்தது. அதேபோல அண்ணா பல்கலைக்கழகம் அருகே கிண்டியிலிருந்து வரும் வாகனங்கள் ஐஐடி மேம்பாலத்தை அடைய இடதுபுறத்தில் இருந்து வலதுபுறத்திற்கு மாற முயலும்போது, நேராக வரும் வாகனங்களோடு மோதும் சூழல் ஏற்பட்டு வந்தது. இதை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தார்கள்.இதுபற்றி அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

    Advertisement

    இந்த சூழலில் சென்னை போக்குவரத்து போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி, கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், காந்தி மண்டபம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மத்திய கைலாஷ் சந்திப்பை நோக்கித் திருப்பி விடப்படும். அவ்வாறு வரும் வாகனங்கள் தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல, 300 மீட்டர் முன்னதாக மத்திய கைலாஷ் புதிய மேம்பாலத்தின் கீழே யுடர்ன் டுக்க அனுமதிக்கப்படும்.

    🚫 காந்தி மண்டபம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், காந்தி மண்டபம் சந்திப்பில் ராஜ் பவன் நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை.

    Advertisement

    ↪️ OMR (ராஜீவ் காந்தி சாலை) பாதையிலிருந்து அடையாறு மற்றும் சாந்தோம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், சிபிடி சிக்னலில் வலதுபுறம் திரும்பித் தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Traffic diversion on the Madhya Kailash – IIT Madras road: What Chennai motorists need to know.